TRB ராஜாவுக்கு எவ்வளவு ஏத்தம்..! நக்கல்..! அத்தனையும் பொய், வெள்ளை அறிக்கை உடனே வெளியிடு.. எடப்பாடி கடுங்கோபம்

Published : Sep 26, 2025, 10:15 AM IST

பதிலடி கொடுத்துள்ள எடப்பாடி பழனிசாமி, ‘‘தொழில் துறை அமைச்சர், ஒரு வெள்ளை காகிதத்தைக் காட்டி இதுதான் வெள்ளை அறிக்கை என்கிறார். எவ்வளவு ஏத்தம் இருந்தால் இப்படிப் பேசுவார்..?’’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

PREV
13
எவ்வளவு ஏத்தம் இருந்தால்...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு முதலீடுகள் குறித்து "வெள்ளை அறிக்கை" வெளியிடக் கோரினார் எடப்பாடி பழனிசாமி. ஆனால் அதற்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா "வெற்று வெள்ளை தாளை" எடுத்து காட்டினார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள எடப்பாடி பழனிசாமி, ‘‘தொழில் துறை அமைச்சர், ஒரு வெள்ளை காகிதத்தைக் காட்டி இதுதான் வெள்ளை அறிக்கை என்கிறார். எவ்வளவு ஏத்தம் இருந்தால் இப்படிப் பேசுவார்..?’’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. வேடசந்தூர் தொகுதியில் பேசிய அவர் ‘‘தொழில் துறை அமைச்சர், ஒரு வெள்ளை காகிதத்தைக் காட்டி இதுதான் வெள்ளை அறிக்கை என்கிறார். எவ்வளவு ஏத்தம் இருந்தால் இப்படிப் பேசுவார்..? நாட்டில் பல லட்சம் பேர் வேலையில்லாமல் சிரமப்படுகிறார்கள். இந்த 52 மாத ஆட்சியில் 922 ஒப்பந்தங்கள் போடப்பட்டதாகவும், 10.5 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டதாகவும், 32 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் 75% ஒப்பந்தங்கள் முடிந்துவிட்டதாகவும் ஸ்டாலின் சொன்னார்.

23
அத்தனையும் பொய்...

ஸ்டாலின் அவர்களே, டி.ஆர்.பி ராஜா அவர்களே… இதற்கு நீங்கள்தான் விளக்கம் கொடுக்க வேண்டும். 922 ஒப்பந்தங்கள் போடப்பட்டது என்று சொன்னால், அதில் 75% நிறைவேற்றப்பட்டது என்று சொன்னால் சுமார் 25 லட்சம் பேருக்கு வேலை கிடைத்திருக்க வேண்டும். இத்தொகுதியில் எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது? 32 லட்சத்தில் 75% என்றால் 25 லட்சம் பேருக்கு வேலை கிடைத்திருக்க வேண்டுமே…. சொல்வது அத்தனையும் பொய்.

பிரதான எதிர்க்கட்சி மக்களுடைய பிரச்னைகளை எடுத்துச்சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில், 10.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு வந்ததாகச் சொன்னதற்கு வெள்ளை அறிக்கை கேட்டேன். தொழிலின் நிலை என்ன? எவ்வளவு பேருக்கு வேலை கிடைத்தது என்று விளக்கம் கேட்டால், வெள்ளை காகிதத்தை காட்டுகிறார்.

டிஆர்பி ராஜா அவர்களே, உங்களுடைய ஆட்சி வெற்று விளம்பர ஆட்சி என்பதை வெள்ளை காகிதத்தைக் காட்டி நிரூபித்துவிட்டீர்கள். சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும். அங்கு ஒன்றுமே இல்லை. எனவே வெள்ளை காகிதத்தைத் தான் காட்டியாக வேண்டும். இந்த ஆட்சியில் அத்தனையும் பொய், பொய் தவிர்த்து வேறு ஒன்றுமேயில்லை.

ஒரு புள்ளி விவரம் சொல்கிறேன். தொழிற்சாலைகளில் 2019-20 ஆண்டில் தொழிலாளர்கள் எண்ணிக்கை 16.91 பர்சண்டேஜ். அதே 2023-24 திமுக ஆட்சியில் இந்த எண்ணிக்கை 15.95% என்று குறைந்திருக்கிறது. 2019-20ல் ஃபேக்ட்ரி கவுன்ட் பெர்சன்டேஜ் 15.75%, அதே 2023-24 திமுக ஆட்சியில் 15.42%. அப்படியென்றால் தொழிற்சாலை அதிகமாக வந்து வேலை அதிகமாக கிடைத்தது என்றால் என்ன அர்த்தம்? அத்தனையும் பொய். இப்படி பொய் செய்திகளை வெளியிட்டு திமுக மக்களை ஏமாற்றுகிறது.

வேடசந்தூர் பகுதி நூற்பாலைகள் நிறைந்த பகுதி, பல்லாயிரக்கணக்கான பேருக்கு வேலை கிடைக்கிறது. நூற்பாலை தொழில் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கிறது, மின்கட்டணம் உயர்ந்துவிட்டதால் நூல் மில்கள் எல்லாம் மூடுகின்ற அபாயமும், தொழிலாளர் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டிருக்கிறது. திமுக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

33
ஊழல் அரசு தொடர வேண்டுமா..?

2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தனது தேர்தல் அறிக்கையில் 525 அறிவிப்புகளை ஸ்டாலின் வெளியிட்டார். அவற்றில் 10% கூட நிறைவேற்றவில்லை, ஆனால் 98% நிறைவேற்றப்பட்டதாக ஸ்டாலினும், அமைச்சர்களும் பச்சை பொய் சொல்கிறார்கள். 100 நாள் வேலைத்திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும் என்றார், சம்பளம் உயர்த்தப்படும் என்றார், ஆனால் செய்யவில்லை. முழுமையாக சம்பளம் கூட கொடுக்க வக்கில்லாத அரசு திமுக அரசு. அதிமுக ஆட்சி இருக்கும்போது 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளிக்கு குறிப்பிட்ட காலத்தில் வங்கியில் பணம் போய் சேரும், அது அதிமுக ஆட்சியின் திறமை.

10 ரூபாய் என்றால் பாலாஜி பேர்தான் மக்களுக்கு ஞாபகம் வருகிறது, அடுத்த கூட்டம் கரூருக்குத்தான் போகிறேன். தமிழ்நாடு முழுவதும் 6 ஆயிரம் மதுக்கடை இருக்கின்றன. டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி பாட்டில் விற்கிறது, ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக பெறுவதால் நாளொன்றுக்கு 15 கோடி ரூபாயும், மாதத்துக்கு 450 கோடி ரூபாயும், வருடத்துக்கு 5400 கோடியுமாக இந்த நான்காண்டுகளில் 22 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள், இந்த பணம் மேலிடத்துக்கு போயிருக்கிறது, இப்படிப்பட்ட ஊழல் அரசு தொடர வேண்டுமா?’’ எனக் கேள்வி எழுப்பினார்.

Read more Photos on
click me!

Recommended Stories