இதை மக்கள் எப்படி பார்க்கிறார்கள்? ரசிக்கிறார்களா அல்லது வேடிக்கையாக பார்க்கிறார்களா? என்பது பற்றியும் தெரிந்து கொள்ள நினைக்கிறது அதிமுகவின் தலைமை. சரி மக்களிடம் திமுக ஆட்சி மீது அதிருபதி இல்லை என்றால் என்ன செய்யலாம் என்ற கேள்வியும் அதிமுகவிடம் இருக்கிறது. அந்த இடத்தில் நிச்சயமாக டெல்லியில் தயவு என்பது தேவை என நினைக்கிறது அதிமுக.
இது குறித்து டெல்லி வட்டாரத்தில் விசாரித்தோம். ‘‘அவர்கள் பலே திட்டம் ஒன்று தயாராக கூறுகிறார்கள். அதாவது ஏற்கனவே கீழமை நீதிமன்றங்களில் திமுக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி, பொன்முடி, ரகுபதி, அனிதா ராதாகிருஷ்ணன் துரைமுருகன், எ.வ.வேலு போன்றவர்கள் மீது சொத்து குவிப்பு வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்குகளில் சில நீதிமன்ற தடைகளும் இருக்கின்றன. அதுவே வழக்கில் இறுதி விசாரணை மற்றும் தீர்ப்பு வழங்குவதற்கு தடையாக இருக்கிறது. எனவே அத்தகைய தடைகளை சட்டரீதியாக தகர்க்க, டெல்லி மேலிடம் நகர்வுகளை வேகப்படுத்தலாம். குறிப்பாக உச்ச நீதிமன்றத்தின் மூலமாகவே அத்தகைய சிக்கல்களை தீர்க்க முடிவு செய்துள்ளனர். ஒருவேளை இந்த நகர்வு வெற்றிகரமாக நடந்தால் ஸ்டாலின் அமைச்சரவையில் இருக்கும் பாதிக்கும் மேலான அமைச்சர்கள் சிறைக்கு போக வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.