அப்போது முதல் நயினார் நாகேந்திரனுக்கும், அண்ணாமலைக்கும் இடையில் பனிப்போர் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. ஒரு பக்கம் அண்ணாமலை தனி ரூட்டில் சென்று கொண்டிருக்கிறார். நயினார் நாகேந்திரனுடன் ஒட்டவே இல்லை. டிடிவி,தினகரன் அண்ணாமலையை புகழ்ந்து பேசியதோடு நயினார் நாகேந்திரனை கடுமையாக விமர்சித்தார். இதனையடுத்து டிடிவி. தினகரனை சந்தித்துள்ளார் அண்ணாமலை.
அண்ணாமலையின் இந்த நடவடிக்கையில் மூன்று முக்கியமான விஷயங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அண்ணாமலை கூட்டணி கட்சிகளை ரொம்ப நல்லபடியாக கையாண்டார். ஆனால் நயினார் நாகேந்திரனால் முடியவில்லை. எல்லா தலைவர்களும் அண்ணாமலையுடன் நெருக்கமாக இருக்கிறார்கள். அதனால் நயினாரை விட அண்ணாமலை தான் சரியாக அவருடைய பணிகளை செய்கிறார். எல்லா தலைவர்களும் அண்ணாமலையுடன் நெருக்கமாக இருக்கிறார்கள். அதனால் நயினாரை விட அண்ணாமலை தான் சரியாக அவருடைய பணிகளை செய்கிறார்.
தன்னையே கூட்டணியை ஒன்றிணைக்கக்கூடிய நபராக வெளிக்காட்டிக் கொள்கிறார். எடப்பாடி பழனிச்சாமி எதிர்ப்பை தாண்டி பாஜக தலைவரால் செய்ய முடியாத அதிமுக ஒருங்கிணைப்பை அண்ணாமலை தான் செய்கிறார் என்கிற கருத்தை டெல்லி பாஜக மத்தியில் உருவாக்க வேண்டும் என அண்ணாமலையின் செயலுக்கு பின்னணியில் இருக்கக்கூடிய காரணங்களாக சொல்லப்படுகிறது.