பிரிந்தவர்களுக்கு மீண்டும் இடம் கிடையாது என அழுத்தம் திருத்தமாக சொல்லி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இது ஓபிஎஸ் மட்டுமல்ல, அண்ணாமலைக்கும் கொடுக்கப்பட்டிருக்கிற எச்சரிக்கை என்கிறார்கள் அதிமுக நிர்வாகிகள்.
ஒரு புறம் மு.க ஸ்டாலின் எம்.பி.,களுக்கு பாடம் எடுத்து அசைன்மெண்ட் கொடுத்திருக்கும் அதே நேரத்தில் இன்னொரு புறம் முன்னாள் முதலமைச்சர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி பரப்புரை பயணத்தை தீவிர படுத்திக் கொண்டு இருக்கிறார். திமுகவை அட்டாக் செய்து வரும் அவர் குறிப்பாக திமுகவுக்கு சோதனை வந்தபோது அறிவாலயத்தை காப்பாற்றிக் கொடுத்தவரே எங்களுடைய அம்மா தான். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.
அவரது ஆட்சி காலத்தில் வந்த அந்த பிரச்சனையைச் சொல்லி அதே திமுக இன்றைக்கு அதிமுகவை உடைக்க முயற்சி செய்து வதவதாகவும், அவர்களின் சதி எடுபடாது என அட்டாக் செய்திருக்கிறார். அதாவது டிடிவி.தினகரன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் உள்ளிட்ட பலரை அதிமுகவுக்கு எதிராக தூண்டிவிட்டு இருக்கிறது திமுக என்கிற ரீதியில் அட்டாக் செய்திருக்கிறார்.
24
டார்கெட் செந்தில் பாலாஜி
ஓபிஎஸ், ஸ்டாலினை போய் பார்த்ததை வைத்து எடப்பாடி பழனிசாமி இதனை தெரிவித்துள்ளர். அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் கூட திமுகவுக்கு ஒரு பிரச்சனை என்றால் அவர்களை காப்பாற்ற, அரவணைக்கப் போன ஒரு கட்சி அதிமுக. ஆனால் டிமுக உடைக்கிற வேலையை செய்கிறது என ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க இந்த விஷயத்தை பேசி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
அடுத்து மிஷன் திமுக. இதில் குறிப்பாக டார்கெட் செந்தில் பாலாஜி. அவர் கரூரில் முப்பெரும் விழாவை நடத்தி காண்பித்ததை முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டித்தள்ளினார். அதே கூட்டத்தை ஒட்டி இன்னொரு பக்கம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, இதே முதலமைச்சர் தான் அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த காலகட்டத்தில் செந்தில் பாலாஜி எப்படி விமர்சித்திருக்கிறார் பாருங்கள் என அந்த வீடியோவை போட்டு காட்டி, பழைய அறிக்கைகளை எல்லாம் வெளியிட்டார். ஏனென்றால் மேற்கு மண்டலத்தில் செந்தில் பாலாஜியை ஒரு தளபதியாக முன்னிறுத்தி திமுக வேலை பார்த்து வருகிறது
34
கோபி எங்கள் கோட்டை
அவரை டார்கெட் செய்தால் திமுக பலவீனமாகும். அது இன்னொரு பக்கம் அதிமுகவுக்கு பலமான மேற்கு மண்டலத்தை தக்க வைத்துக் கொள்ளலாம் எனக் கணக்குப் போடுகிறார் எடப்பாடி பழனிசாமி. இதன் அடுத்த கட்டமாக எல்லாத் துறைகளிலும் ஊழல் மலிந்து கிடக்கிறது. திமுக ஆட்சியில் குறிப்பாக 6000 டாஸ்மாக் மதுக்கடைகளில் தினமும் 1.5 கோடி மது பாட்டில் விற்று பத்து ரூபாய் கூடுதலாக பெறுவதால் தினமும் 15 கோடியும், மாதம் 450 கோடியும், வருடத்திற்கு சுமார் 5400 கோடி கொள்ளை அடித்திருக்கிறார்கள். அதாவது கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் 22,000 கோடி வரை கொள்ளை அடித்திருக்கிறார்கள் எனத புள்ளி விவரங்களை அடுக்கினார்.
மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்த பிறகு இது சம்பந்தமாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என முக்கியமாக செந்தில் பாலாஜியை அதிகமாக டார்கெட் செய்கிறார். முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன் 10 நாள் கெடு எல்லாம் விதித்திருந்தார். அவருடைய பதவிகளை பறித்தார் எடப்பாடி பழனிசாமி. அவருடைய மாவட்டத்தில் செங்கோட்டையனை தாண்டி யாராலும் ஒரு அணுவையும் அசைக்க முடியாது என்றெல்லாம் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதை உடைக்கிற மாதிரி கோபி எங்கள் கோட்டை என்பதை காட்ட கோபியில் பயங்கரமான வரவேற்பு எடப்பாடி பழனிசாமிக்கு கொடுக்கப்பட்டது.
இதன் மூலமாக உங்கள் மாவட்டத்தில் கூட எனக்கு தான் செல்வாக்கு இருக்கு. என்னுடைய பலம் புரிந்து, நீங்க இனிமேல் செயல்படுங்கள். அமைதியாக இருங்கள் என்பது போல் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதே நேரத்தில் பிரிந்தவர்கள் எல்லாம் ஒன்று சேர வேண்டும். இந்த கூட்டணி வலிமையாக அண்ணாமலை டி.டி.வி.தினகரனை சந்தித்தது எடப்பாடி பழனிசாமிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால்தான் பிரிந்தவர்களுக்கு மீண்டும் இடம் கிடையாது என அழுத்தம் திருத்தமாக சொல்லி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இது ஓபிஎஸ் மட்டுமல்ல, அண்ணாமலைக்கும் கொடுக்கப்பட்டிருக்கிற எச்சரிக்கை என்கிறார்கள் அதிமுக நிர்வாகிகள்.