2026 சட்டமன்றத் தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் அதிக தொகுதிகள் கேட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இது கூட்டணியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 2021 தேர்தலில் திமுக கூட்டணியில் 25 தொகுதிகளைப் பெற்ற காங்கிரஸ், 2026-ல் 117 தொகுதிகளை கேட்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் அதிக தொகுதிகள், கூட்டணி ஆட்சியை வலியுறுத்தியுள்ளனர். ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி, பாஜக கூட்டணியை உதாரணமாகக் காட்டி, "கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தரவேண்டும் வேண்டும்" என்கின்றனர்.
திமுக இதுவரை அதிகாரப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், கூட்டணி உறவு வலுவானது என்கிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின், கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறி வருகிறார். காங்கிரஸ் அதிக தொகுதிகளை கேட்பதால், காங்கிரஸ்-திமுக கூட்டணியில் பிளவு வரும் என்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.