2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக தனித்து 133 தொகுதிகளையும், கூட்டணியுடன் 159 தொகுதிகளையும் வென்றபோது போல், இம்முறை 200+ தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கட்சி இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனாலும், புதிதாக வந்துள்ள விஜயின் தமிழக வெற்றிக் கழகம், அதிமுக, பாஜக கூட்டணி போன்றவை திமுகவுக்கு சவால்களாக மாறியுள்ளன.
திமுகவில் இப்போது மொத்தம் 72 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். இவர்களது செயல்பாட்டை கட்சி மேலிடம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. செயல்படாத சில மாவட்டச் செயலாளர்களை அடையாளம் கண்டு வருகிறது திமுக தலைமை. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்திய ‘உடன்பிறப்பே வா’ நிகழ்ச்சியின் மூலமாக நிர்வாகிகள் கூறிய குற்றச்சாட்டுகளை அடிப்படையாக வைத்து சில மாவட்ட செயலாளர்களை பதவியில் இருந்து நீக்க முடிவெடுத்துள்ளார் மு.க.ஸ்டாலின் என கூறப்படுகிறது.