இதனைத் தொடர்ந்து கரூரில், தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பயணத்தில், தொண்டர்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்காமல் தடுக்க, அக்கட்சி நிர்வாகிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்குவதுடன் வாகனங்களில் வருவோரை திசைதிருப்ப , 'டேக் டைவர்ஷன்' திட்டத்தை செயல்படுத்த, கரூர் மாவட்ட திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம், வரும் டிசம்பர் 20ம் தேதியுடன் முடிவதாக இருந்தது. ஆளும் கட்சி தரப்பில் அனுமதி தருவதில் இழுபறி ஏற்படுவதால் அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மக்கள் சந்திப்பு பயணத்தில் விஜயின் பேச்சு, திமுக வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. அவர் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு, அமைச்சர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், நாளை கரூரில் நடிகர் விஜய் மக்களை சந்திக்கிறார். அவரது சுற்றுப்பயணத்தை தோல்வி அடைய வைக்க கரூர் மாவட்ட திமுக களமிறங்கி உள்ளது.