நாமக்கல் நடு நடுங்க...! கரூர் கதி கலங்க...! தவெக கோஷம்... நாய் படம் போட்டு உதயநிதியின் ‘சனிக்கிழமை’ ஆசுவாசம்..!

Published : Sep 27, 2025, 12:12 PM IST

விஜயின் திருவாரூர் பிரச்சாரம் நடைபெற்ற 20ம் தேதி சனிக்கிழமையும் நாயுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்தார் உதயநிதி. இன்று விஜய் கரூர் பிரச்சாரத்தை தொடங்க உள்ள நிலையிலும் நாயுடன் இருக்கும் புகைப்படத்தை எக்ஸ்தளத்தில் பகிர்ந்துள்ளார் உதயநிதி.

PREV
14
புதிய அரசியல் அலை

2026 தேர்தலுக்கு முன் தமிழக அரசியலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரங்கள் கடந்த சில மாதங்களாக பெரும் எழுச்சி கண்டுள்ளன. 2024 பிப்ரவரி 2 அன்று தவெகவை தொடங்கிய விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராகப் போட்டியிடுவதாக அறிவித்ததில் இருந்து, அவரது ரசிகர் அமைப்பான விஜய் மக்கள் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய அரசியல் அலை உருவாக்கி வருகிறார். 

இது திமுக, அதிமுக போன்ற முக்கிய கட்சிகளையே அதிர வைத்துள்ளது. உங்கள் விஜய் நான் வருகிறேன்.. வரலாறு திரும்புகிறது பிரச்சாரத்தை செப்டம்பர் 13,ம் தேதி திருச்சி மாரக்கடை மைதானத்தில் முதல் மாநிலளாவிய பிரச்சாரப் பயணம் தொடங்கினார் விஜய். அவர் 38 மாவட்டங்களில் டிசம்பர் 20 வரை பிரச்சாரம் செய்ய உள்ளார். திருச்சி, திரூவாரூரில் லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டு, விஜயின் பேச்சைக் கேட்டு ஆர்ப்பரித்து வருகின்றனர்.

24
மாற்றத்தின் அலை

நாகப்பட்டினம் பிரச்சாரத்தில் விஜய், முதல்வர் ஸ்டாலினின் ஊழல், மக்கள் பிரச்சினைகளை நேரடியாகத் தாக்கினார். இது திமுகவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இன்று நாமக்கல், கரூரில் பிரச்சாரம் செய்ய உள்ளார். ரசிகர்கள் தன்னெழுச்சியாக குவிந்து வருகின்றனர். "இது வெறும் ரசிகர்கள் அல்ல, மாற்றத்தின் அலை" என காங்கிரஸ் தரப்பினர் கூட ஒப்புக்கொள்கின்றனர். கரூர் பிரச்சாரம் குறித்து பொதுமக்கள், அரசியல் விமர்சகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இன்று மதியம் சுமார் 12 மணிக்கு கரூர் மாவட்டம், வேலுசாமிபுரத்தில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். அதற்கு முன்பு காலை நாமக்கல் மாவட்டத்தில் சேலம் சாலையில், கே.எஸ். தியேட்டர் பகுதியில் அவர் பேச உள்ளார்.

34
கருப்பு நாயுடன் ரெளடி

விஜயின் பிரச்சாரம் நாமக்கல்லில் நடு நடுங்க வைக்க, கரூரில் கதி கலங்க வைக்கும் நிலையில் உதயநிதி சனிக்கிழமை பழக்க தோசத்தை தொடர்ந்து வருகிறார். இன்று உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ்தளப்பதில் வெளியிட்ட இந்தப் படம், "ரவுடி" என்ற பெரிய கருப்பு நாயுடன் ஒரு விளையாட்டுத்தனமான புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இது பொதுவாக ஆட்சியில் கவனம் செலுத்தும் ஒரு அரசியல்வாதியின் பொது நகைச்சுவை தருணத்தை பிரதிபலிக்கிறது.

இது உதயநிதி ஸ்டாலினின் பரபரப்பான அரசியல் செயல்பாடுகளுக்கு மத்தியில் செல்லப்பிராணியை கொஞ்சுவதாகக் கூறப்பட்டாலும், தற்போதைய தமிழ்நாட்டு அரசியல் பதட்டங்களுடன் முரண்பட்டதாகத் தெரிகிறது. அதாவது சனிக்கிழமை தோறும் விஜய் பிரச்சாரம் செய்து வருகிறார். அதனை உதாசீனப்படுத்தும் வகையில் உதயநிதி ஸ்டாலினும் தொடர்ச்சியாக தனது நாயுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ‘ரெளடி’ என கேப்சனுடன் பகிர்ந்து வருகிறார். செப்டம்பர் 13ம் தேதி திருச்சியில் விஜய் பிரச்சாரத்தை ஆரம்பித்த அன்று முதல் நாயுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர ஆரம்பித்தார்.

44
உதயநிதி ஸ்டாலினின் ஆசுவாசம்

அடுத்து விஜயின் திருவாரூர் பிரச்சாரம் நடைபெற்ற 20ம் தேதி சனிக்கிழமையும் நாயுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்தார் உதயநிதி. இன்று விஜய் கரூர் பிரச்சாரத்தை தொடங்க உள்ள நிலையிலும் நாயுடன் இருக்கும் புகைப்படத்தை எக்ஸ்தளத்தில் பகிர்ந்துள்ளார் உதயநிதி. ஆக, விஜய் பிரச்சாரத்தை மையப்படுத்தியே நாயுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து உதயநிதி ஸ்டாலின் ஆசுவாசப்பட்டுக் கொள்கிறார் என்கின்றனர் தவெக நிர்வாகிகள்.

Read more Photos on
click me!

Recommended Stories