அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி சந்திப்புதான் தமிழக அரசியலில் உச்சகட்ட பரப்பரப்பாக பேசப்பட்டு வருகிறது. அந்த சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி இரண்டு மூன்று டிமாண்ட் வைத்துள்ளடாகவும், இல்லை இல்லை அமித் ஷா எடப்பாடி பழனிசாமிக்கு இரண்டு மூன்று லாக் வைத்துள்ளதாகவும் பல்வேறு தகவல்கள் வட்டமடித்துக் கொண்டு இருக்கின்றன.
அந்தச் சந்திப்பின்போது அமித் ஷா, ‘‘ நீங்கள் பிரிந்தவர்களை ஒன்று சேர்த்துக் கொள்ள வேண்டும் அல்லது அவர்களை என்டிஏ கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம்’’ என எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டு இருக்கிறார். அதற்கு எடப்பாடி பழனிசாமி, ‘‘இல்லைங்க ... அவர்கள் என்டிஏ கூட்டணிக்கே வந்தாலும் சரிப்பட்டு வராது. ஏனென்றால் அவர்கள் கட்சிக்கு எதிராக செயல்பட்டு இருக்கிறார்கள். துரோகம் எல்லாம் செய்திருக்கிறார்கள் என நான் பரப்புரை செய்திருக்கிறேன். இந்த நேரத்தில் அவர்களை கூட்டணியில் சேர்ந்தால் அவர்களுக்காக நான் எப்படி வாக்கு கேட்க முடியும்?’’ என லாஜிக்காக பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.