முதல் திட்டம் சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக மதுரைக்கு வருவது. இரண்டாவது சாலை மார்க்கமாகவே சென்னையில் இருந்து வருவது. ஆனால், மதுரை விமான நிலையத்தில் இருந்து தங்க உள்ள வீட்டிற்கு செல்லும் வழியில் கூட்டம் சேர்ந்து விடும் என்பதால் சாலைமார்க்கமாகவே காரில் வந்து தங்கும் இடத்திற்கு சென்றுவிட்டார் விஜய். தற்போது அவர் மதுரையில் ரகசியமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தனிவீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
அங்கிருந்து மிக பாதுகாப்பாக மாநாடு திடலுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை திட்டமிட்டு இருக்கிறார்கள். இதற்கு முக்கியமான சில காரணங்களை அவர்கள் தெரிவிக்கிறார்கள். பல்வேறு மாவட்டங்களில் இருந்து, குறிப்பாக வெளி மாவட்டங்களில் இருந்து மாநாட்டுக்கு வரக்கூடிய பல்லாயிரக்கணக்கான தொண்டர்களின் முழு எண்ணமும் விஜயை நேரில் பார்த்து விட வேண்டும், அவருடன் ஒரு செல்பியாவது எடுத்துக் கொள்ள வேண்டும், அவரை தொட்டு விட வேண்டும் என்கிற எண்ணத்தில் அவரது ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.