கத்திப்பாராவில் உள்ளே சென்று பாருங்கள். நீலாங்கரை செல்லும் வழியெல்லாம் பாருங்கள். அங்கே கழிவுகள் நிறைய சேர்கிறது. ஆனால், தள்ளுவண்டி வைத்திருக்கும் ஒரு ஆளை பார்க்க முடியவில்லை. காரணம், எல்லோரையும் அடித்து விரட்டுகிறார்கள்’’ என்றார்
‘‘அனுபவம் இருப்பவர்கள்தான் அதிமுகவில் தற்போதைய சிக்கலை தீர்க்க முடியும் என்று சொன்னீர்கள். உங்கள் அனுபவத்தை அவர்கள் பயன்படுத்தி கொள்ள தயாராக இருக்கிறார்கள் என நினைக்கிறீர்களா ? இப்போது இருக்கிற தலைமை வேறு யாருக்கும் இடமில்லை என்று தொடர்ச்சியாக சொல்லி வருகிறார்கள். நீங்கள் இல்லாமலே 2019, 2021, 2024 தேர்தலை சந்தித்து விட்டார்கள். 2026 தேர்தலுக்கும் ஆயத்தமாகி கொண்டு வருகிறார்கள். நீங்கள் எப்படி இதில் செயல்பட போகிறீர்கள்? என்ற கேள்விக்கு, ‘‘ நான்தான் பண்ணுவேன் என்று சொல்கிறேனே. நிச்சயம் செய்வேன். நான் செயலில் இறங்கிய பிறகு ரிசல்ட்டை பாருங்கள். சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக போட்டியிடுவது தமிழ்நாட்டுக்கு பெருமை தான். ரொம்ப நல்ல மனிதர். இரண்டு முறை மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டவர். இது தமிழ்நாட்டு மக்களுக்கு பெரிய சந்தோஷமான விஷயம்’’ என்றார்.