எதிர்க்கட்சியான காங்கிரஸ் தன் பாத்திரத்தை வகிக்க முற்றிலும் தவறிவிட்டது. காங்கிரஸ் வீட்டிற்குள் அமர்ந்திருக்கிறது. சில நேரங்களில் அவர்கள் அரசியலமைப்பைக் காப்பாற்றுவதை நினைவில் கொள்வதில்லை. சில நேரங்களில் வாக்குத் திருட்டு பற்றி பேசுகிறார்கள்.
‘‘துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்ததற்கான காரணத்தை ஜக்தீப் தன்கர் இன்னும் ஒருவார காலத்திற்குள் விளக்க வேண்டும் எனக் கெடு விதித்துள்ளார் ராஜஸ்தானைச் சேர்ந்த ராஷ்ட்ரிய லோக்டண்ட்ரிக் கட்சியின் தலைவரும் முன்ளாள் எம்.பி.,யுமான ஹனுமான் பெனிவால்.
இதுகுறித்து அவர்,‘‘தன்கர் ஜி ஒரு மாத கால அவகாசம் கேட்டிருந்தார். அது இப்போது முடிவடைய உள்ளது. நாங்கள் இன்னும் ஏழு நாட்கள் அவகாசம் கொடுக்கிறோம். அதற்குள் காரணத்தைக் கூறுங்கள். ஆறு மாதங்களுக்குப் பிறகு அவர் மருத்துவமனையில் இருந்து காரணத்தைக் கூறினால், நாங்கள் அதை நாங்கள் ஏற்க மாட்டோம்.
23
காங்கிரஸ் வீட்டிற்குள் அமர்ந்திருக்கிறது
இந்த விவகாரத்தில், எதிர்க்கட்சியான காங்கிரஸ் அதன் பாத்திரத்தை வகிக்க முற்றிலும் தவறிவிட்டது. காங்கிரஸ் வீட்டிற்குள் அமர்ந்திருக்கிறது. சில நேரங்களில் அவர்கள் அரசியலமைப்பைக் காப்பாற்றுவதை நினைவில் கொள்வதில்லை. சில நேரங்களில் வாக்குத் திருட்டு பற்றி பேசுகிறார்கள். வாக்குத் திருட்டு பிரச்சினையில் எங்கள் கட்சி இந்திய கூட்டணியுடன் இருகிறது. ஆனால், காங்கிரஸ் மற்ற விஷயங்களில் அமைதியாக இருக்கிறது. ராஜஸ்தானில் எங்கள் கட்சியான ஆர்.எல்.பி உண்மையான எதிர்க்கட்சியாக செயல்படுகிறது.
நாங்கள் வாக்குகளைத் திருடிவிட்டோம் என்று தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ளாது. ஆனால், வாக்கு திருட்டு நிச்சயமாக நடக்கிறது. 'தேர்தல் ஆணையம் எம்.பி.க்களுடன் அமர்ந்து இந்த விவகாரத்தை வெளிப்படையாக விவாதிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் 300 எம்.பி.க்களை கைது செய்தது. இது நாட்டின் ஜனநாயகத்தின் நிலை குறித்து கேள்விகளை எழுப்புகிறது. நாட்டில் ஜனநாயகம் எங்கே மீதமிருக்கிறது?' என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
33
தன்கர் தானே முன்வந்து தெளிவுபடுத்த வேண்டும்
துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கரின் ராஜினாமா குறித்து பல ஊகங்கள் நிலவும் நேரத்தில் ஹனுமான் பெனிவாலின் இந்தக் கோரிக்கை பரபரப்பை கிளப்பி உள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு, எதிர்க்கட்சிகள் இரண்டையும் பெனிவால் குற்றம் சாட்டியுள்ளார். அவரது பேச்சு ராஜஸ்தானிலும், தேசிய அளவிலும் அரசியல் பரபரப்பை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. நாட்டு மக்கள் உண்மையை அறியும் வகையில், ராஜினாமாவுக்குப் பின்னால் உள்ள காரணங்களை தன்கர் தானே முன்வந்து தெளிவுபடுத்த வேண்டும் என்று பெனிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.