கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உட்பட நான்கு பேர் டிசம்பர் 29-ம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜராக சமன் அனுப்பப்பட்டு இருக்கிறது. கரூர் வழக்கு விசாரணை தீவிர படுத்தப்பட்டு வருகிறது. தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகிகளிடம் சிபிஐ அதிகாரிகள் ஏற்கனவே விசாரணை நடத்தினர். புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் ஈரோடு மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோரிடம் ஏற்கெனவே சுமார் 10 மணி நேரம் விசாரி நடத்தப்பட்டது.
இருப்பினும் விசாரணை முழுமை அடையவில்லை எனக்கூறப்படுகிறது. மீண்டும் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் ஈரோடு மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் மீண்டுமே விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிஐ அறிவுறுத்தி இருக்கிறது. டிசம்பர் 29 அன்று டெல்லியில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் கூடுதல் விசாரணை நடக்கவுள்ளது. டெல்லி இந்த விவகாரத்தை தீவிரமாக கையாள்வது விஜய் தரப்ப அதிர்ச்சி உள்ளாக்கி இருக்கிறது. முக்கிய நிர்வாகிகளை டெல்லிக்கு சிபிஐ அழைத்துள்ளது விஜய் கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. டெல்லி இந்த விவகாரத்தில் இவ்வளவு கடுமை காட்டும் என விஜய் நினைக்கவே இல்லை என்கிறார்கள்.