‘மாணவர்களின் One Side லவ் Double Side-ஆ மாறிடும்..!’ காதலைச் சொல்லி கலகத்தில் சிக்கிய அமைச்சர் அன்பில் மகேஷ்..!

Published : Aug 22, 2025, 01:26 PM IST

என்ன உதாரணம் அமைச்சரே..? எல்லா பாடங்களையும் விரும்பி படியுங்கள் எனச் சொல்ல ‘திருமணம் கடந்த உறவு மாதிரி.." என்று சொல்வீர்களா? மாணவர்கள் மத்தியில் கல்வி அமைச்சருக்கு கல்வியை ஒப்பிட்டு பேச வேற எதுவும் கிடைக்கவில்லையா? 

PREV
14

"முதல்ல One Side லவ் ஆக தான் இருக்கும், ஆனா நீங்க விரும்பி காதலிக்க காதலிக்க Double Side-ஆ மாறிடும்".. கல்வியின் அருமையை காதலுடன் ஒப்பிட்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியதால் பள்ளிக்கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

மாணவர்களுக்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ‘‘முதலில் படிக்கும் பொழுது உங்களுக்கு தோணலாம், கல்வி என்பது ஒரு காதலிக்கிற மாதிரி. நிறைய பேருக்கு ஒன் சைடு லவ் ஆக தான் இருக்கும். அதை விரும்பி காதலிக்க, காதலிக்க கல்வியும் உங்களை காதலிக்க ஆரம்பித்து விடும். அப்படி வரும்போது அந்த கல்வியை விட்டு விடாதீர்கள்.

24

ஏனென்றால், இந்த கல்வி உங்கள் தலைமுறைக்காக மட்டும் உங்களைப் பெற்றவர்கள் கொடுக்கவில்லை. நீங்கள் படித்து முன்னேறி விட்டீர்கள் என்றால் உங்களை தொடர்ந்து வரக்கூடிய ஏழேழு தலைமுறைகளும் அது சார்ந்த அவர்களது வாழ்க்கையும் மாறிப் போய்விடும். நீங்கள் படித்து ஒரு பெரிய உத்தியோகத்தில் வரலாம். நீங்களே பெரிய நிறுவனங்களை ஆரம்பிக்கலாம். உங்களது ஒழுக்கம் மிகவும் முக்கியம். அதே நேரத்தில் படிப்பில் தோய்ந்து போய் விட்டோம், மதிப்பெண்கள் சரியாக வரவில்லை என்றெல்லாம் கவலைப்படாதீர்கள்.

34

வாங்கக்கூடிய மதிப்பெண்கள் மட்டுமே உங்கள் வாழ்க்கையை மதிப்பீடு செய்து விடாது. தனி திறமைகளையும் நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். எனக்கு படிப்பு வரவில்லை. ரொம்ப ஸ்லோவாக இருக்கிறது. என்னை நம்பி இவ்வளவு பணத்தை பெற்றோர்கள் போட்டு விட்டார்கள். ஆனால் படிப்பில் குறைந்த மதிப்பெண்கள் வாங்கி விட்டேன் என்றெல்லாம் தயவு செய்து யாரும் நினைக்க வேண்டிய அவசியம் இல்லை. திறமை சார்ந்திருப்பது தான் மிக மிக அவசியம். எல்லா பிள்ளைகளும் நூற்றுக்கு நூறு வாங்குவதில்லை. நூற்றுக்கு நூறு வாங்கும் பிள்ளைகளும் இருப்பார்கள், சாதாரணமாக படிக்கும் மாணவர்களும் இருப்பார்கள். ஆனால், சாதரணமாக படிக்கும் மாணவர்களிடத்தில் இருக்கும் திறமை நூற்றுக்கு நூறு வாங்கும் பிள்ளைகளிடத்தில் இருக்காது’’ எனப்பேசினார்.

44

கல்வியை காதலுடன் ஒப்பிட்டு உதாரணம் கூறிய அன்பில் மகேஷின் இந்தப்பேச்சு சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. ‘‘தன் தலையில் மண்ணை வாரி போட்டுக் கொள்வதில் திமுக அமைச்சர்களை மிஞ்ச முடியாது. மாணவர்களுக்கு எது தெரியுமோ அதை வைத்து உதாரணம் சொல்லி பேச வேண்டும்.

என்ன உதாரணம் அமைச்சரே..? எல்லா பாடங்களையும் விரும்பி படியுங்கள் எனச் சொல்ல ‘திருமணம் கடந்த உறவு மாதிரி.." என்று சொல்வீர்களா? மாணவர்கள் மத்தியில் கல்வி அமைச்சருக்கு கல்வியை ஒப்பிட்டு பேச வேற எதுவும் கிடைக்கவில்லையா?

தயவு செய்து நீங்களும், உங்கள் துறை ஐஏஎஸ் அதிகாரிகளும் பதவி விலகிச் செல்லுங்கள். பள்ளிக்கல்வி துறை உருப்படும்’’ என கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories