விஜய், மாநாடு ஆரம்பிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னரே வர இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த முறை விஜய் கட்சிக்கூட்டம் நடத்திய போது தடுப்புக்கு போடப்பட்டிருந்த கம்பிகளை தாண்டி தொண்டர்கள் ஏறி வர ஆரம்பித்தனர். இதில் பலருக்கு அடிப்பட்டது. இதை தடுக்க, அந்த கம்பிகளில் க்ரீஸ் பூசப்பட்டு இருக்கிறது. அதே போல, இந்த முறை தண்ணீர் குடிப்பதற்காக நேரடியாக நிலத்தில் பைப் போட்டு கொடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ வசதிக்கு ஆம்புலன்ஸ், பாதுகாப்புக்கு காவல்துறை என்று பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
தவெக மாநாட்டில் 224 பேர் வரை மயக்கம், தலைசுற்றல் காரணமாக முதலுதவி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மாநாடு நடக்கும் இடத்தில் வெயில் வாட்டி வதைப்பதால் தரை விரிப்புகளை எடுத்து நிழலுக்கு தொண்டர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பலர் வாகனங்களுக்கு அடியில் அமர்ந்துள்ளனர், தற்போதைய நிலவரப்படி 200க்கும் மேற்பட்டோருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ORS வாட்டர், மாத்திரை கொடுத்து மருத்துவக்குழுவினர் முதலுதவி செய்து வருகின்றனர்.