சீமானும், விஜய்யும் ஆரம்பத்தில் நட்பு பாராட்டினாலும், அரசியல் கொள்கைகளில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக, தற்போது இருவருக்கும் இடையே வார்த்தைப் போர் உருவாகியுள்ளது. சீமானின் தமிழ் தேசியக் கொள்கைகளும், விஜய்யின் திராவிடம்-தமிழ் தேசியம் கலந்த அரசியல் நிலைப்பாடும் மோதலை ஏற்படுத்தியுள்ளன.
விஜய் அரசியலில் நுழைந்தபோது, சீமான் அவரை ‘தம்பி’ என அழைத்து ஆதரவு தெரிவித்தார். 2024-ல் தவெக-வின் முதல் மாநாட்டிற்கு வாழ்த்து தெரிவித்து, விஜய்யின் நம்பிக்கையும், நல்நோக்கமும் வெற்றி பெற வாழ்த்தினார். ஆனால், விஜய்யின் "திராவிடமும், தமிழ் தேசியம் இரு கண்கள்" என்ற பேச்சு, சீமானின் தமிழ் தேசியக் கொள்கைகளுக்கு எதிராக இருப்பதாகக்கூறி, சீமான் கடுமையாக விமர்சித்தார். "ஒரு பக்கம் நில், நடுவில் நின்று லாரியில் அடிபடாதே" என விஜய்யை கடுமையாக விமர்சித்தார்.