mk stalin
சமீப காலமாக அதிகரித்துள்ள கொரோனா தொற்று பிரபலங்களை குறி வைத்து வருகிறது. தற்போது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கொரோனாவால்பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பரிசோதனை செய்யப்பட்டபோது அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. அதை அடுத்து சென்னை காவிரி மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு...ரொம்ப சந்தோஷமா இருக்கு.. நான் சொன்ன யோசனை செயல்வடிவம் பெற்றுவிட்டது.. அன்புமணி ராமதாஸ்..!
MK Stalin
கடந்த ஜூலை 12ஆம் தேதி ஸ்டாலினுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. கொரோனா குறித்தான அறிகுறிகள் மற்றும் கண்காணிப்பிற்காக முதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனை வெளியிட்டுள்ள குறிப்பில் முதல்வர் கண்காணிப்புக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு...சர்ச்சை ஆடியோ.. கடுப்பில் முன்னாள் அமைச்சர்கள்.. திடீரென இபிஎஸ்- பொன்னையன் சந்திப்பு
senthamarai stalin
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினின் மகள் செந்தாமரை தந்தை நலம் பெற திருவண்ணாமலையில் பிரார்த்தனை செய்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. தொழிலதிபராகஜொலித்து வருகிறார் செந்தாமரை ஸ்டாலின். முன்னதாக கடந்த 2021ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது செந்தாமரை ஸ்டாலின் தனது வீட்டில் ஐடி சவாரி நடத்தியபோது செய்திகளில் இடம்பிடித்தவர். இவரது கணவர் சபரீசன் தொழிலதிபர் மற்றும் அரசியல் வாதியான அறியப்படுகிறார்.