BJP : தென் மாநிலங்களில் இனி பாஜக ஆட்சி..பிரதமர் மோடி போட்ட ஸ்கெட்ச் !

First Published Jul 3, 2022, 10:34 PM IST

பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் அவ்வப்போது விசிட் அடித்தும் வருகிறார்கள். இந்த நிலையில், பாஜக தேசிய செயற்குழு கூட்டம் ஹைதராபாத்தில் நடத்துகிறது.

பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி தனி விமானம் மூலம் ஹைதராபாத் வந்தார். அவரை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜக தலைவர்கள் வரவேற்றனர். முதல்வர் சந்திரசேகர ராவ் பிரதமரை வரவேற்க செல்லவில்லை. மோதல் போக்கு காரணமாக அவர் செல்லவில்லை என்று கூறப்பட்டது. இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலங்கானாவில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான வேலைகளை அரசியல் கட்சிகள் இப்போதே தொடங்கி விட்டன. கடந்த முறை சட்டமன்றத்தை கலைத்து விட்டு முன்னரே தேர்தலை சந்தித்த சந்திரசேகர ராவ், அந்த சமயத்தில் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார்.

பாஜக தெலங்கானா மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க முனைப்பு காட்டி வருகிறது. பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் அவ்வப்போது விசிட் அடித்தும் வருகிறார்கள். இந்த நிலையில், பாஜக தேசிய செயற்குழு கூட்டம் ஹைதராபாத்தில் நடத்துகிறது. செயற்குழு கூட்டத்தை குத்து விளக்கேற்றி அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தொடங்கி வைத்தார்.

'பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஆற்றல்மிக்க ஹைதராபாத் நகருக்கு வந்திறங்கி இருக்கிறேன். இந்த கூட்டத்தில், கட்சியை மேலும் பலப்படுத்தும் வகையில் பல்வேறு பரந்த விஷயங்கள் குறித்து விவாதிப்போம்' என்று ட்விட்டரில் பதிவிட்டார் பிரதமர் மோடி.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் உள்ளிட்ட அக்கட்சியின் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் ஹைதராபாத் வந்துள்ளனர். பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பிரதமர் மோடி வருகையின் போது அவருக்கு சிறப்பான வரவேற்பை அளித்தனர்.

இதில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'நாட்டின் அடுத்த 30-40 ஆண்டுகள் பாஜகவின் சகாப்தமாகத் தான் இருக்கும். இந்த காலகட்டத்தில் இந்தியா விஷ்வகுருவாக உருவெடுக்கும்' என்று கூறினார்.

இரண்டு நாள் நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் தென் மாநிலங்களில் கட்சி வளர்ப்பதை குறிவைத்து முக்கிய ஆலோசனைகள் நடைபெற்றது என்றும், தெலங்கானா, ஆந்திர பிரதேசம், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பாஜகவை பெரும் சக்தியாக மாற்ற முக்கிய யூகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

click me!