மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 91வது பிறந்த நாளையொட்டி சென்னையில் முதல் முறையாக இன்று மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு தோட்டக்கலை துறை சார்பில் பிரமாண்ட மலர் கண்காட்சி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு, ஊட்டி, கிருஷ்ணகிரி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மலர் வகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.