தமிழகம் வர இன்னும் 10 நாள் இருக்கும் போதே.. டுவிட்டரில் #GoBackModi டிரெண்டிங்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்.!

First Published May 16, 2022, 10:52 AM IST

பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இந்த மாத இறுதியில் தமிழ்நாடு வர இருக்கிறார். இந்நிலையில், தமிழகம் வர இன்னும் 10 நாட்கள் உள்ள நிலையில் தற்போதே #GoBackModi டிரெண்டிங்காவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் ராணுவ தளவாட கண்காட்சி தொடக்கவிழா மற்றும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை வைர விழாவில் பங்கேற்பதற்காக கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி பிரதமர் மோடி விமானம் மூலம் சென்னை வருகை தந்தார். சென்னை வரும் பிரதமருக்கு கறுப்புக்கொடி  காட்டப்படும் என திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அறிவித்தன. அதனடிப்படையில் சென்னையில் மொத்தம் 29 இடங்களில் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் சார்பாக கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது.  அதேபோல், Go Back மோடி என்ற ஹேஸ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டது. நாட்டின் பிரதமர் என்றும் பாராமல் திமுக அரசியல் உள்நோக்கத்துடன் இப்படி நடந்து கொள்கிறது என்றும் பாஜக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அப்போது திமுகவை கடுமையாக விமர்சித்தன.

இந்நிலையில், திமுக ஆட்சியமைத்த பிறகு கடந்த ஜனவரி 12ம் தேதி பிரதமர் மோடி மதுரையில் பொங்கல் விழாவில் பங்கேற்க இருந்தாக இருந்தது. மேலும், தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளை திறந்து வைக்க வருகை தருவதாகவும் இருந்தது. கொரோனா பரவல் காரணமாக மோடியின் தமிழகம், புதுச்சேரி பயணமும் ரத்து செய்யப்பட்டு  காணொலி வாயிலாக  மருத்துவக் கல்லூரிகளை  தொடங்கி வைத்தார்.

இந்நிலையில்,  வரும் 26ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் விழாவில் பங்கேற்க தமிழகம் வருகிறார். தெற்கு ரயில்வேயின் புதிய திட்டங்களையும் பிரதமர் மோடி காணொலி வாயிலாக திறந்து வைக்கவுள்ளதாக தெரிகிறது. அத்துடன் ரூ. 12,413 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், பிரதமர் மோடி தமிழகம் வர இன்னும் 10 நாட்கள் உள்ள நிலையில் கோ பேக் மோடி டிரெண்ட் செய்யப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த கால காங்கிரஸ் ஆட்சியில்சிலிண்டர் விலை சிறிது உயர்ந்தாலும் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக, தற்போது சிலிண்டர் விலையை மாதந்தோறும் தாறுமாறாக உயர்த்தி உள்ளது. பொருளாதார நெருக்கடியில் தடுமாறும் மக்களுக்கு, எவ்வித நன்மையும் செய்யாமல் மோடி அரசு இருக்கிறது என்று விமர்சிக்கும் வகையில் இந்த கார்ட்டூன் வரையப்பட்டிருக்கிறது.
 

காமராஜர், பிரதமர் மோடி புகைப்படத்தை ஒப்பிட்டு நெட்டிசன்கள் கிண்டல் செய்துள்ளனர். அதில், காமராஜர் மக்களின் அடிப்படை தேவைகளை உருவாக்கி மக்கள் போற்றும் தலைவனாக இருந்தார். ஆனால், பிரதமர் மோடியே மதத்தால் மக்களை பிரிக்கும் முயற்சியில் ஈடுபடுவதாகவும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான அரசாக இருந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

ஜானி ஜானி எஸ். பாப்பா என்று குழந்தைகளின் பாடலை குறிப்பிட்டு பிரதமர் மோடியை நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர். அதில், பிரதமர் மோடியின் ஆட்சியில் நாட்டில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை, விவசாயிகள் சந்தோஷமாக இல்லை, பெண்களுக்கு பாதுகாப்பில்லை, வேலை வாய்ப்பு இல்லை என்று பதிவிட்டுள்ளனர். 
 

பாசிசவாதி இந்தி திணிப்பாளர் நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்து என பதிவிட்டு கோ பேக் மோடி என்று ராஜஸ்தானை சேர்ந்தவர் பதிவிட்டுள்ளார். 

நம் இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துகொண்டே வருகிறது. ஆனால் நம் அண்டை நாடான பூட்டானில் அப்படியில்லை. நம் நாட்டில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 112 , பூடானில் 76. அதேபோல், இந்தியாவில் டீசல் விலை லிட்டருக்கு 102, பூடானில் 73 விற்பனை செய்யப்படுகிறது.

click me!