அமைச்சராக பொறுப்பேற்றார் நடிகை ரோஜா.. எம்.எல்.ஏ முதல் அமைச்சர் வரை அரசியல் பயணம் !

Published : Apr 13, 2022, 05:14 PM IST

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கடந்த 2019ஆம் ஆண்டில் முதல்வராக பதவி பொறுப்பேற்றார். இதையடுத்து ஜெகன் அமைச்சரவையில் 25 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். ஆனால் அவர்கள் இரண்டரை ஆண்டுகள் மட்டுமே அந்த பதவியில் நீடிப்பர் என ஜெகன் முன்னரே தெரிவித்திருந்தார்.

PREV
18
அமைச்சராக பொறுப்பேற்றார் நடிகை ரோஜா.. எம்.எல்.ஏ முதல் அமைச்சர் வரை அரசியல் பயணம் !

மேலும் அந்த 25 பேருக்கு பதில் புதியவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்றும் அவர்கள் மீதமுள்ள இரண்டரை ஆண்டுகளுக்கு அமைச்சர்களாக செயல்படுவர் என்றும் அறிவித்திருந்தார்.

28

இந்த நிலையில் அமைச்சரவை பதவியேற்று 3 ஆண்டுகள் ஆகும் நிலையில் புதிய அமைச்சரவையை நியமனம் செய்ய முதல்வர் ஜெகன் மோகன் முடிவு செய்தார். அதில் அமைச்சராக இருந்த கவுதம் ரெட்டி அண்மையில் மாரடைப்பால் மரணமடைந்தார்.

38

இதையடுத்து 24 பேரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதுவரை சிறப்பாக பணியாற்றியவர்கள் மற்றும் மூத்த அமைச்சர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதன் பின்னர் புதிதாக யாருக்கு வாய்ப்பு வழங்கலாம் என ஆலோசிக்கப்பட்டது.

48

புதிய அமைச்சர்களில் நகரி தொகுதி எம்எல்ஏவும் நடிகையுமான ஆர் கே ரோஜாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதனால் அவர் முதல்முறையாக அமைச்சரானார். 

58

ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாத்துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக நேற்று முன்தினம் நடிகை ரோஜா பதவியேற்றார்.

68

எம்எல்ஏவாக இருந்த போது ஒரு சில திரைப்படங்களிலும் டிவி நிகழ்ச்சிகளிலும் நடித்ததாகவும் இதை பலர் விமர்சனம் செய்ததாகவும் கூறிய அமைச்சர் ரோஜா தற்போது அமைச்சர் ஆகிவிட்டதால் பொறுப்புகள் அதிகரித்து உள்ளன என்றும் எனவே இனி திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் நடிக்கமாட்டேன் என்று கூறியுள்ளார்.

78

குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன், அமைச்சராக ரோஜா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். 

88

ரோஜாவின் மகள் அன்ஷு மாலிகா,மகன் கிருஷ்ணா லோகித் செல்வமணி,கணவர் ஆர்.கே.செல்வமணியும் அருகில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!

Recommended Stories