ஆயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டு ஊருக்கு வெளியில் ஒதுக்கப்பட்டு கிடைக்கிற சேரிகள் தலைநிமிர்வே தன் ஒரே லட்சியம் என அரசியல் பயணத்தை துவக்கி இன்று தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக உயர்ந்து நிற்கும் தலைவர் தமிழகத்தில் ஒருவர் உண்டு என்றால் அது திருமாவளவனாகத்தான் இருக்க முடியும். தமிழகத்தை அரைநூற்றாண்டு காலம் ஆட்சி செய்த திராவிட இயக்கத்தின் பன்முகத் தன்மைகொண்ட தலைவராக வாழ்ந்து மறைந்த கலைஞர் கருணாநிதிக்குப் பின்னர் கொள்கையாளர், பேச்சாளர், ஓவியர், கவிஞர், நடிகர், எழுத்தாளர், பத்திரிகையாளர், முன்னாள் அரசு ஊழியர் என பன்முகத் தன்மைக்கு சொந்தக்காரர் திருமாவளவன் என்பதை எவறும் மறுக்க முடியாது.