இவர்களை தொடர்ந்து, ஏற்கனவே சென்னை மேயராகவும், எதிர்க்கட்சி தலைவராகவும், தற்போதைய முதல்வராகவும் இருந்து வரும் மு.க.ஸ்டாலிலும், பருவ மழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை பகுதி மக்களுக்கு விரைந்து உதவி செய்யும் முதல்வராக களத்தில் இறங்கி இருந்தாலும், இனி இதுபோல் சென்னையை மழை நீர் சூழ்ந்ததால் மக்களை பாதிக்காத வண்ணம், மழை நீரை முறையாக சேமிக்கும் வகையிலும் கடலில் சென்று கலந்திடவும் ஏதேனும் ஆக்கபூர்வ நடவடிக்கையில் ஈடுபடுவாரா? என்பதே சென்னை மக்களின் எதிர்பாப்பாக உள்ளது.