முத்துராமலிங்க தேவர் - மருது சகோதரர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின்!

Published : Oct 30, 2021, 10:04 AM IST

தேவர் ஜெயந்தி (Devar Jayanthi) இன்று அனுசரிக்கப்படும் நிலையில், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் (Chief Minister MK Stalin) மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  

PREV
15
முத்துராமலிங்க தேவர் - மருது சகோதரர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின்!

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 114-வது ஜெயந்தி மற்றும் 59-வது குருபூஜை விழா அக் 28ந்தேதி தொடங்கி கடந்த 3 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

25

அக்டோபர் 28 ஆம் தேதி யாகசாலை பூஜை மற்றும் லட்சார்ச்சனையுடன் ஆன்மிக விழா தொடங்கிய நிலையில், தேவர் ஜெயந்தியில் கலந்து கொள்ள நேற்றைய தினமே தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மதுரை வந்தார்.

 

 

 

35

இன்று காலை கோரிப்பாளையத்தில் உள்ள தேவரின் பிரமாண்ட சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதல்வர்,  இதை தொடர்ந்து...  பசும்பொன் செல்லும் வழியில் மதுரை தெப்பக்குளத்தில் இருந்த மருது சகோதரர்களின் சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 

45

இந்த நிகழ்வில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர், உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

55

முதல்வர் தேவரின் ஜெயதியில் கலந்து கொண்டதால், நிகழ்வு நடைபெறும் இடத்தில்... பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்ததுடன், கொரோனா நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

 

click me!

Recommended Stories