பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பி.கே... ஒரே மேசையில் ஸ்டாலினுடன் அமர்ந்து தேநீர் அருந்திய ஓபிஎஸ்... போட்டோஸ்!

First Published May 7, 2021, 1:42 PM IST

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற  முக்கிய கட்சி தலைவர்கள், ஸ்டாலின் குடும்பத்தினர் உள்ளிட்டோரின் புகைப்பட தொகுப்பைக் காணலாம்...

சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது, திமுக 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளது.
undefined
இன்று காலை 9 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்பு விழா நடைபெற்றது.
undefined
கொரோனா பரவல் காரணமாக எளிமையாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஸ்டாலின் உட்பட 34 அமைச்சர்களுக்கும் பதவி பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
undefined
MK Stalin
undefined
பதவியேற்பு விழாவில் மு.க.ஸ்டாலின் குடும்பத்தைச் சேர்ந்த கனிமொழி, துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், மருமகள் கிருத்திகா உதயநிதி, மருமகன் சபரீசன், மகள் செந்தாமரை, பேரன், பேத்திகள் ஆகியோர் பங்கேற்றனர்.
undefined
முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஸ்டாலினுக்கு அவருடைய அண்ணன் மு.க.அழகிரி வாழ்த்து கூறியது நேற்று பரபரப்பைக் கிளப்பியது. இந்நிலையில் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி மனைவியுடன் பங்கேற்றார்.
undefined
பதவியேற்பு நிகழ்ச்சிக்கு வந்த மு.க. அழகிரி மகன் தயாநிதி அழகிரியை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கட்டியணைத்து வரவேற்றார்.
undefined
இந்நிகழ்ச்சியில் எதிர்கட்சி தலைவர்களான ஓ.பன்னீர்செல்வம், தனபால், பாஜகவைச் சேர்ந்த இல.கணேசன், ச.ம.கட்சி தலைவர் சரத்குமாரும் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
undefined
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசனை உதயநிதி ஸ்டாலின் வரவேற்பு விஜபி வரிசையில் அமர வைத்தார்.
undefined
திமுக.வுக்கு தேர்தல் ஆலோசனைகளை வழங்கும் `ஐபேக்' நிறுவனத்தின் பிரசாந்த் கிஷோரும் பதவியேற்பு விழாவில் பங்கேற்றார். பி.கே. என அழைக்கப்படும் பிரசாந்த் கிஷோரை உதயநிதி ஸ்டாலின் வரவேற்று, பிற தலைவர்களுடன் விஜபி வரிசையில் அமர வைத்தார்.
undefined
பதவியேற்பு விழா நிறைவடைந்த பிறகு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
undefined
சட்டப்பேரவையில் எதிர் எதிராக அமர்ந்து விவாதம் நடந்த உள்ள எதிர்கட்சியினரும், ஆளுங்கட்சியினரும் ஒரே மேஜையில் அமர்ந்து தேநீர் அருந்தியது அற்புதமான தருணம் ராஜ்பவனில் அரங்கேறியுள்ளது.
undefined
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடன் ஒரே மேசையில் அமர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தனபால் ஆகியோர் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
undefined
click me!