எப்போது விஜயின் அரசியல் பிரவேசம் ஆரம்பமானதோ அதுவரை அரசியல் களத்தில் சீமானுக்கு இளைஞர்களிடத்தில் இருந்த முக்கியத்துவம் குறையத் தொடங்கியது. நடிகர் அரசியலுக்கு வருவதால்அவரது ஒவ்வொரு நடவடிக்கையையும் மீடியாக்களும் இலவசமாக விளம்பரப்படுத்தத் தொடங்கினர்.
திமுக அதிமுக இரண்டு கட்சிகளுமே மாறி மாறி ஆட்சி செய்து வந்ததனால் மக்களுக்கு சலிப்பு ஏற்பட்டு ஒரு மாற்று வேண்டுமென நெடுங்காலமாக பெரும்பாலானோர் கருதி வந்த வேளையில் இளைஞர்களின் கவனம் சீமான், அண்ணாமலையை நோக்கிச் செல்ல ஆரம்பித்தன. ஆனால் தற்போது சூழ்நிலை மாறியுள்ளது. இதுவரை வரை சீமானுக்கு வந்த ஓட்டுக்கள், பெரும்பாலும் அப்படியே விஜயின் பக்கம் திரும்பப் போகிறது. திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ், விசிக போன்ற கட்சிகளில் இருக்கும் இளைஞர்களின் ஓட்டுக்கள் கூட விஜய்க்கு மாறப் போகிறது என்கிறார்கள். இதனால் பாதிக்கப்படப் போவது நாதக. இந்த கட்சி சென்ற தேர்தலில் வாங்கிய ஓட்டுக்கள் சதவிகிதம் இந்த தேர்தலில் அதல பாதாளத்தில் விழப் போவதை சீமானே உணர்ந்துள்ளார்.