காவல்துறையினரில் எஃப்.ஐ.ஆரில் விஜய் பெயரை நேரடியாக பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆனால் தவெகவின் 3 முக்கிய நிர்வாகிகளான கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாநில இணைச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் செப்டம்பர் 29 அன்று கைது செய்யப்பட்டார். அவர் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். புஸ்ஸி ஆனந்தை போலீஸார் தேடி வருகின்றனர். ஆதவ் அர்ஜூனா மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசல் தொடர்பாக திமுக அரசுக்கு எதிராக வதந்திகளைப் பரப்பியதாக பலரும் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். கரூரில் "விஜய்யை கைது செய்யுங்கள்" என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. விஜயை கைது செய்ய திமுக அரசு அஞ்சுவதாக பலரும் கூறி வருகின்றனர். திமுக கூட்டணியில் உள்ள விசிக தலைவர் திருமாவளவன், ‘‘விஜய் மீது வழக்குப் பதிவு செய்யாதது "அரசியல் காரணங்களால்தான். திமுக- தவெக இடையே ரகசிய ஒப்பந்தம் இருக்கலாம்’’ என்று சந்தேகம் கிளப்பினார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரும் கேள்வி எழுப்பியிருந்தனர். நீதிமன்றமும் விஜய் மீது நடவடிக்கை எடுக்காத்து ஏன் என விளக்கம் கேட்டிருந்தது.