இங்கிட்டு மரண அடி...! அங்கிட்டு ராஜமரியாதை..! விஜய்க்கு Z பிரிவு பாதுகாப்புக்கு ஏற்பாடு..!

Published : Oct 04, 2025, 03:06 PM IST

கரூர் சம்பவத்தில் திமுகவை நீங்கள் முழுமையாக குற்றம் சாட்டுவதால்,  உங்கள் மீது கோபத்தில் இருப்பபார்கள். அதனால், தவெக தரப்பில் அடுத்தடுத்து நடக்கக்கூடிய பிரச்சார கூட்டங்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்' என்றும் விஜயிடம் எச்சரித்துள்ளார் அமித் ஷா.

PREV
14
பழி வாங்கத் துடிக்கும் திமுக?

கரூர் விவகாரத்தில் திமுக விஜய்க்கு எதிராக கடும் குற்றச்சாட்டுக்களை முன் வைத்து அவரது நிர்வாகிகளை கைது செய்து வருகிறது. விஜயும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படும் நிலையில் அவரை பாஜக மேலிடம் ஆதரித்து காப்பாற்றி வருவதாகக் கூறப்படுகிறது. தவெகவுக்கு திமுக எதிர்ப்பு; பாஜக ஆதரவு என கரூர் விவகாரத்துக்கு பிறகு கட்டமைக்கப்பட்டு வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தவெக மோதல் தீவிரமடைந்துள்ளது. அதே போல் தவெகவுக்கு பாஜகவின் ஆதரவும் அதிகரித்து வருகிறது. தவெக, பாஜகவை கொள்கை எதிரி என்றும், திமுகவை அரசியல் எதிரி என்றும் விஜய் கூறி வந்தார்.

தவெக எந்தக் கூட்டணியும் இல்லை என்று அறிவித்து, 2026 தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் என்று அறிவித்தது. ஆனால், கரூர் விவகாரத்தால், திமுகவின் அதிரடி செயல்பாடுகளால் ஆடிப்போய் விட்டார் விஜய். அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அமித் ஷா தொடர்பு கொண்டு நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் எனத் தெரிவித்த பிறகு தனித்து நிற்கும் விஜயின் மனநிலை மாறிவிட்டதாகக் கூறப்படுகிறது. திமுகவின் நடவடிக்கைகளை ஒற்றை கட்சியாக சமாளிக்க முடியாது என்கிற முடிவுக்கு விஜய் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

24
நீதிமன்றம் காட்டம்

ஏற்கனவே திமுகவை எதிர்க்கும் அனைவரையும் ஒன்றிணைக்க பாஜக திட்டமிட்டு வருகிறது. அதன்படி கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு பாஜக சார்பில் தவெக தரப்பு நெருங்கி வருவதாக கூறப்படுகிறது. தவெக நிர்வாகிகளுடன் ஆடிட்டர் குருமூர்த்தி ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திலும், பாஜக தரப்பில் விஜய்க்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தனர். அண்ணாமலை முதல் இந்த சம்பவத்தை பற்றி விசாரணை நடத்த அமைக்கப்பட்ட பாஜக எம்பிக்கள் குழு வரை தவெகவுக்கு ஆதரவாக தமிழ்நாடுஅரசு மற்றும் காவல்துறையை விமர்சனம் செய்தனர்.

இந்த தவெக தொடர்பான மனுவை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் தனது உத்தரவில், ‘‘27.09.2025 அன்று நடந்த துயரமான நிகழ்வுகளையும் அதன் பின்விளைவுகளையும் முழு தேசமும் கண்டது. இதன் விளைவாக 41 பேர் உயிரிழந்தனர். அதிர்ச்சியூட்டும் விதமாக, அரசியல் கட்சியின் தலைவர் உட்பட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தங்கள் சொந்த தொண்டர்கள், ஆதரவாளர்கள், ரசிகர்களை கைவிட்டு, அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டனர். எந்த வருத்தமும் இல்லை, பொறுப்புணர்வும் இல்லை, வருத்தமும் இல்லை.

34
விஜய்க்கு கைது அச்சம்..?

கூட்டத்தை ஏற்பாடு செய்த விஜய், தலைவர் மற்றும் அவரது அரசியல் கட்சியின் உறுப்பினர்கள் சம்பவ இடத்தை விட்டு ஓடிவிட்டதை இந்த நீதிமன்றம் மிகவும் வருத்தமளிக்கிறது. விபத்துகளுக்குப் பிறகு உடனடியாக சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடியதற்காக விஜய், நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள், அரசியல் கட்சியின் உறுப்பினர்களின் நடத்தையை இந்த நீதிமன்றம் கடுமையாகக் கண்டிக்கிறது’’ எனக் குட்டு வைத்துள்ளது. நீதிபதி செந்தில் குமாரின் உத்தரவு தவெகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரது பின்புலத்தையும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தவெகவை பழிவாங்கும் திமுக என்ற குற்றச்சாட்டு, திமுக அரசு தவெகவை அரசியல் ரீதியாக ஒடுக்க முயல்கிறது என்ற விமர்சனம் பலமாக எழுந்துள்ளது. தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், பிரச்சார செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட செயலாளர்கள் மதியழகன், நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். விஜயும் கைது செய்யப்படலாம் என்கிற அச்சம் நிலவுகிறது.

44
விஜய்க்கு Z பிரிவு பாதுகாப்பு

"கரூர் சம்பவத்திற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும். யாரைப் போதும் பழிசுமத்தி தப்ப முடியாது" எனத் தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. "திமுகவின் நிர்வாக சீர்கேடு காரணம்; விஜய் மீது தவறான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுவதாக" பாஜகவினர் கூறி வருகின்றனர்.

விஜயுடன் அமித் ஷா பேசும்போது,'கரூர் சம்பவத்துக்குப் பின், உங்களுக்கு அச்சுறுத்தல் கூடுதலாகி உள்ளது. அதனால், ஏற்கனவே வழங்கும் மத்திய அரசு பாதுகாப்பை பலப்படுத்த திட்டமிட்டுள்ளோம். கரூர் சம்பவத்தில் திமுகவை நீங்கள் முழுமையாக குற்றம் சாட்டுவதால், அக்கட்சியினர் உங்கள் மீது கோபத்தில் இருப்பபார்கள். அதனால், தவெக தரப்பில் அடுத்தடுத்து நடக்கக்கூடிய பிரச்சார கூட்டங்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்' என்றும் விஜயிடம் எச்சரித்துள்ளார் அமித் ஷா.

இதன்தொடர்ச்சியாக, தற்போது விஜய்க்கு மத்திய அரசு வழங்கி வரும், சிஆர்பிஎப் பாதுகாப்பை இரண்டு மடங்காக்கும் வேலைகளை, மத்திய உள்துறை அமைச்சகம் துவங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. அதன்படி விஜய்க்கு Z பிரிவு பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் விரைவில் அளிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories