நான் ஆட்சிக்கு வந்தவுடன் அறிவாலயத்தை தரைமட்டமாக்குவேன்.! ஸ்டாலினை அலற விடும் சீமான்

Published : Aug 12, 2025, 07:58 AM IST

திமுக சிறுபான்மை மக்களின் வாக்குகளை நம்பி ஆட்சியமைத்தும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என சீமான் விமர்சித்தார். திமுகவை எதிர்க்கும் யாரையும் பாஜகவின் B டீம் என முத்திரை குத்துவதாகவும் குற்றம் சாட்டினார்.

PREV
14
சிறுபான்மை மக்களின் கோரிக்கையை நிறைவேற்றாத திமுக

தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், சென்னையில் எது நமக்கான அரசியல் என்கின்ற தலைப்பில் இந்திய தேசிய லீக் கட்சி ஒருங்கிணைக்கும் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், திமுக சிறுபான்மை மக்களின் 15 சதவீத வாக்குகளை நம்பித்தான் உள்ளது. 

அந்த வாக்கில்தான் ஆட்சி அமைத்துள்ளது. ஆனால் அவர்கள் கோரிக்கையை மட்டும் நிறைவேற்றவில்லை. எனவே திமுகவிற்கு அடுத்த முறை வாக்கு செலுத்துவதை நிறுத்துங்கள். அதன் பின்னர் அவர்கள் உங்கள் வழிக்கு வருவார்கள் என தெரிவித்தார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மறைந்த பழனி பாபா விற்க்கு நினைவு மண்டபம் அமைக்கப்படும் அதில் அவர் பேசிய காணொளிகள் ஒளிபரப்பு செய்யப்படும் என கூறினார்.

24
பாஜகவின் ஏ டீம் திமுக

பிரதமர் மோடி 75 வயதிற்கு பின் பதவி விலக ஆர்.எஸ்.எஸ் ஆல் அச்சுறுத்தல் எழுந்துள்ளது. எனவே ஏதேனும் பிரச்சனை வந்தால் திமுகவின் 22 சீட்டுகள் உதவும் என மோடி நம்புகிறார். அதனால் தான் தமிழ்நாட்டுக்கு வந்த மோடி திமுக பற்றி விமர்சனம் செய்யவில்லை என கூறினார். பாஜகவின் A டீம் திமுகதான், ஆனால் அவர்கள் நம்மை B டீம் என் சொல்வார்கள் .

அதுமட்டும் இல்லை திமுகவை எதிர்க்கும் யாராக இருந்தாலும் அவர்கள் பாஜக B டீம் என முத்திரையும் திமுகவினர் குத்துவார்கள் என விமர்சித்தார். தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரை வைத்துக்கொண்டு தனது கட்சி கொடியினை எடுத்துக்கொண்டனர். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கின்ற எனது கொள்கை கோட்பாட்டை தமிழக வெற்றி கழகத்தில் எடுத்துக் கொண்டனர். எல்லாமே என்னுடைய கட்சியில் இருந்து எடுத்துக் கொண்டனர்.

34
விஜய்யை நிராகரிப்பது ஏன்.?

ஆனால் பெரியாரை தனது கொள்கை தலைவராக தமிழக வெற்றிக் கழகம் கூறுகிறது. தமிழ் அழிய வேண்டும் எனக் கூறியவர் பெரியார் அவரை கொள்கை தலைவராக தவெக அறிவித்துள்ளது. அதனால் தான் நான் விஜயை ஏற்றுக்கொள்ளவில்லை என கூறினார். மொழி அடிப்படையில் தான் மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. 

அதை அப்படி தான் நீங்கள் பார்க்க வேண்டும்., இல்லை என்றால் நீங்கள் தமிழக வெற்றிக் கழகம் என பெயர் வைத்து இருக்க கூடாது. அகில இந்தியா அகில உலக வெற்றிக் கழகம் என ஆரம்பித்து இருக்க வேண்டும். அவரது கோட்பாடு வேறாக உள்ளது. எங்களது கோட்பாடு வேறாக உள்ளது. மேலும் தமிழ் மொழியை ஒழிக்க வேண்டும் என பேசியவர் பெரியார். அப்படி பேசியவர் வேறு எந்த சேவை செய்தாலும் எங்களுக்கு தேவையில்லை

44
அறிவாலயத்தை தரைமட்டமாக்குவேன்

திருச்சியில் உள்ள அண்ணா அறிவாலயம் வக்பு வாரியத்திற்கு சொத்தமான இடத்தில் இருக்கிறது. நான் ஆட்சிக்கு வந்த பிறகு வக்பு வாரியத்தில் உள்ள அனைத்து கட்டிடங்களையும் தரைமட்டம் ஆக்குவேன் என ஆவேசமாக தெரிவித்தார். மெரினாவில் உள்ள சமாதியே எடுப்பேன் என கூறுகிறேன் இது என்ன என கூறினார். 

பாஜக வை உள்ளே நுழைய விட மாட்டோம் என திமுகவினர் கூறி வருகிறார்கள். நாங்கள் என்ன சொல்கிறோம் நீங்கள் இருவரும் வேண்டாம் என்கிறோம். எதிர்கட்சியாக இருந்தால் பிரதமர் வரும் போது கருப்பு கொடி காட்டுவது ஆளும்கட்சியாக உள்ள போது பிரதமர் வருயா போது வெள்ளை கொடி காட்டுவது தான் இவர்கள் செய்து வருகிறார்கள் என சீமான் பேசினார்.

Read more Photos on
click me!

Recommended Stories