Published : Aug 11, 2025, 09:52 AM ISTUpdated : Aug 11, 2025, 09:54 AM IST
பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே அதிகார மோதல் தொடர்கிறது. சௌமியா அன்புமணியின் தோல்விக்கு ஜி.கே.மணி தான் காரணம் என முன்னாள் எம்எல்ஏ வேலுச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் வடமாவட்டங்களில் செல்வாக்கு உள்ள கட்சி பாமக, திமுக- அதிமுகவிற்கு கடுமையான டப் கொடுக்கும் கட்சியாக உள்ளது. ஆனால் கடந்த ஓராண்டாக பாமகவிற்கு போதாத காலமாக உள்ளது. பாமக நிறுவனராக உள்ள ராமதாசுக்கும் - அக்கட்சியின் தலைவராக உள்ள அன்புமணிக்கும் இடையே தான் அதிகார மோதல் ஏற்பட்டுள்ளது.
அன்புமணி மீது ராமதாஸ் கடுமையான குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து கூறி வருகிறார். இதற்கு பதிலடி கொடுக்கும் அன்புமணி, ராமதாஸ் அருகில் உள்ளவர்களை கடுமையாக விமர்சித்தும் கட்சியில் இருந்தும் நீக்கி வருகிறார்.
24
தருமபுரி தொகுதியில் சௌமியா அன்புமணி
இந்த மோதலால் பாமகவின் நிர்வாகிகள் இரண்டு தரப்பாக பிரிந்துள்ளனர். எனவே எப்போது சமாதானம் ஆவார்கள் என காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே கிடைத்து வருகிறது. இந்த நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பாமகவின் செல்வாக்கு மிக்க தொகுதியாக கருதப்பட்ட தொகுதி தருமபுரி, அந்த தொகுதியில் பாமக தலைவர் அன்புமணி தனது மனைவி சௌமியா அன்புமணியை வேட்பாளராக அறிவித்தார்.
எனவே சௌமியாவை வெற்றி பெற வைக்க தேர்தல் பிரச்சாரத்தில் அன்புமணி தருமபுரியில் முழு கவனம் செலுத்தினார். எனவே எப்படியும் சௌமியா அன்புமணி வெற்றி பெறுவார் என எதிர்பார்த்து இருந்த நிலையில் கடைசி கட்டத்தில் தோல்வி அடைந்தார்.
34
தோல்வி அடைந்த சௌமியா அன்புமணி
கடந்த 2024 மக்களவைத் தேர்தலில், தருமபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி 4,11,367 வாக்குகள் பெற்றார். தி.மு.க வேட்பாளர் ஆ. மணி 4,32,667 வாக்குகள் பெற்று, 21,300 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் சௌமியா அன்புமணி தோல்விக்கு காரணமே பாமகவின் ஜி.கே.மணி தான் என பாமக முன்னாள் எம்எல்ஏ வேலுச்சாமி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
நேற்று தருமபுரி கடத்தை பகுதியில் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் சௌமியா அன்புமணி கலந்து கொண்டார். அப்போது நிகழ்சியில் பேசிய பாமக முன்னாள் எம்எல்ஏ வேலுச்சாமி, இட ஒதுக்கீட்டிற்காக நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைக்கு சென்று இருக்கீங்களா.? ஒரு போராட்டத்திலாவாவது கலந்து கொண்டு இருக்கீறீர்களா என கேள்வி எழுப்பினார்.
ராமதாசுடன் நெருக்கமாக இருந்த தன்னை போன்றவர்களை நெருங்க விடாமல் விரட்டி விட்டது ஜி.கே.மணி என குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், தருமபுரி தொகுதியில் கட்சிக்காக உழைத்த பலரை ஒலித்துக்கட்டியதும் ஜி.கே. மணி என விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அவர், தரும்புரி தொகுயில் சௌமியா அன்புமணியை தோற்கடிக்க சதி செய்ததே ஜி.கே மணி அணி தான் என முன்னாள் எம்எல்ஏ வேலுச்சாமி தெரிவித்தார்.