Published : Aug 11, 2025, 08:22 AM ISTUpdated : Aug 11, 2025, 08:28 AM IST
பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே அதிகாரப் போட்டி உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இருவரும் தனித்தனியே பொதுக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர், ராமதாஸின் மகளிர் அணி மாநாட்டில் அன்புமணியின் புகைப்படங்கள் இடம்பெறவில்லை.
தமிழகத்தில் திமுக அதிமுக ஆகிய இரண்டு மிகப்பெரிய கட்சிகளுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் குறிப்பாக வட மாவட்டங்களில் செல்வாக்கு உள்ள கட்சி பாமக, வட மாவட்டங்களில் ஒரு அரசியல் கட்சி தேர்தல் வெற்றி பெற வேண்டும் என்றால் பாமகவின் ஆதரவு கட்டாயம் தேவை. அந்த அளவு வட மாவட்டங்களில் தனது செல்வாக்கை தக்க வைத்துள்ளது.
இந்த நிலையில் பாமகவின் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையிலான மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது. இதனால் இரண்டு பிரிவாக பாமக பிரிந்துள்ளது. அதிகார போட்டியால் பாமகவில் நடைபெற்ற வரும் இந்த மோதலால் நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளனர். ராமதாஸ் பக்கம் செல்வதா அல்லது அன்புமணி பக்கம் செல்வதா என புரியாமல் தவித்து வருகிறார்கள்.
24
ராமதாஸ்- அன்புமணி மோதல்
அதே நேரம் ராமதாஸ், அன்புமணிக்கு எதிராக தினந்தோறும் பல்வேறு புகார்களை நேரடியாக தெரிவித்து வருகிறார் ஆனால் அன்புமணியோ தனது தந்தை தொடர்பாக எந்த வித புகார்களையும் கூறாமல் தந்தையை சுற்றியுள்ளவர்களை மட்டும் விமர்சித்து வருகிறார். இந்தச் சூழ்நிலையில் பாமகவில் யாருக்கு செல்வாக்கு அதிகம் என ராமதாஸ்- அன்புமணி என நிலைநாட்ட இருவரும் தொண்டர்களை சந்திக்க மாவட்டம், மாவட்டமாக சுற்றி வருகிறார்கள்.
மேலும் தேர்தல் ஆணையத்தில் தங்கள் அணி தான் பாமக என உறுதி செய்ய வேண்டும் என கடிதம் கொடுத்துள்ளனர். இதில் அடுத்தக்கட்டமாக பாமகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு இரு தரபில் இருந்தும் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த சூழலில் அன்புமணியின் பொது குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி ராமதாஸ் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டதை தொடர்ந்து அன்புமணி கை ஓங்கியது.
34
போட்டி பொதுக்குழு கூட்டம்
அன்புமணி தலைமையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக மாமல்லபுரத்தில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது அந்த கூட்டத்தில் பாமக நிர்வாகிகள் பதவி காலம் மேலும் 1 ஆண்டுக்கு நீடிக்கப்பட்டது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று பாமகவின் மகளிர் அணி மாநாடு பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்த மகளிர் அணி மாநாட்டில் அன்புமணி தொடர்பான பேனரோ அல்லது புகைப்படங்களோ எதுவும் இடம்பெறவில்லை. அன்புமணிக்கு டப் கொடுக்க இந்த மாநாடு கலை கட்டிய நிலையில் மழையின் காரணமாக மாநாட்டில் இருந்த கூட்டம் கலையத் தொடங்கியது. இருந்த போதும் சேர்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ராமதாஸ் ஆதரவாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
மகளிர் அணி மாநாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணிக்கு எதிராக முக்கிய கருத்துகளை தெரிவிப்பார், இரு தரப்பிற்கும் இடையிலான மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து இருந்தனர். எனவே தனது பேச்சை நேரலையில் ஒளிபரப்பப்படும் என ராமதாஸ் நினைத்திருந்தார். இந்த நிலையில் தான் ரஜினியால் ராமதாஸ் ஏமாற்றம் அடைந்தார்.
நேற்று சன் டிவியில் கூலி திரைப்பட பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா அமீர்கான் உள்ளிட்ட நடிகைகள் கலந்து கொண்டு பேசியிருந்தனர். ரஜினியின் பேச்சைக் கேட்க தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் டிவிக்கு முன்பாக உட்கார்ந்து பார்த்தனர். அதே நேரத்தில் ரஜினியின் கூலி பட பாடல் ஒளிபரப்பால் ராமதாஸ் ஸ்பீச் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டாலும் பெரும்பாலான மக்கள் பார்க்க முடியாமல் மழுங்கடிக்கப்பட்டதால் அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.