INDIA Alliance: உடைகிறதா இண்டியா கூட்டணி? ராகுல் காந்தியை விமர்சித்து டெல்லி முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்.!

Published : Jun 08, 2026, 12:46 PM IST

INDIA Alliance Meeting: 'இண்டியா' கூட்டணிக் கூட்டம் நடப்பதற்கு முன்பாக, புது டெல்லியில் ராகுல் காந்திக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதில் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பழைய விமர்சனங்களே இடம்பெற்றுள்ளது, பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
18
INDIA Alliance Meeting

இன்று இண்டியா கூட்டணியின் கூட்டம் டெல்லியில் நடைபெற்று வரும் நிலையில், ராகுல் காந்திக்கு எதிராக டெல்லி முழுவதும் போஸ்டர்கள் ஓட்டப்பட்டுள்ளன. இதனால் இண்டியா கூட்டணி உடைகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

28
எதிர்க்கட்சித் தலைவர்களின் பழைய கருத்துகள்

புது டெல்லியில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களில், என்சிபி (எஸ்சிபி) தலைவர் சரத் பவார், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, திமுக தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸுக்கு எதிராக முன்பு தெரிவித்த கருத்துகள் இடம்பெற்றுள்ளன.

38
காங்கிரஸுக்கு எதிராக செய்யப்பட்ட பழைய கருத்துகள்

இந்த போஸ்டர்களில் சரத் பவார், மம்தா பானர்ஜி, உதயநிதி ஸ்டாலின், அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் பற்றி முன்பு கூறிய காட்டமான விமர்சனங்கள் மீண்டும் விமர்சிக்கக்கப்பட்டுள்ளன.

48
திமுக இந்த கூட்டத்தில் பங்கேற்காது

'இண்டியா' கூட்டணியில் விரிசல்கள் தெளிவாகத் தெரியும் நேரத்தில் இந்த போஸ்டர் சர்ச்சை வெடித்துள்ளது. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்துடன் (TVK) காங்கிரஸ் கைகோர்த்ததால், திமுக இந்த கூட்டத்தில் பங்கேற்காது என அறிவித்துள்ளது. இது திமுக-காங்கிரஸ் உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

58
காங்கிரஸ் மீது திமுகவின் அதிருப்தி

திமுக தலைவர் டிகேஎஸ் இளங்கோவன், காங்கிரஸ் ஒரு "நம்பிக்கையற்ற கட்சி" என்று கடுமையாக விமர்சித்துள்ளார். காங்கிரஸால்தான் மற்ற கட்சிகளும் 'இண்டியா' கூட்டணியை விட்டு வெளியேறப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

68
கூட்டத்தில் 23 அரசியல் கட்சிகள் பங்கேற்பு
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ், இந்தக் கூட்டத்தில் 23 அரசியல் கட்சிகள் பங்கேற்கும் என்று தெரிவித்துள்ளார். தேசிய தலைநகரில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் இந்தக் கூட்டம் நடைபெறும். எதிர்க்கட்சிகள் "ஒற்றுமையாக" இருப்பதாக அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
78
மம்தா பானர்ஜியும் பங்கேற்பார்
மம்தா பானர்ஜி இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஒரு நாள் முன்னதாகவே கொல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு வந்துவிட்டார். சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே காணொளி வாயிலாக கூட்டத்தில் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
88
ராகுல் காந்தியின் போஸ்டர்களை ஒட்டியது யார்?
டெல்லி சாலைகளில் காங்கிரஸுக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களை யார் தயாரித்து ஒட்டினார்கள் என்பது பற்றிய எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இது அரசியல் வட்டாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read more Photos on
click me!

Recommended Stories