Latha Rajinikanth: அண்ணாமலைக்கு போட்டியாக புதிய இயக்கம்? அரசியலில் குதிக்கிறாரா லதா ரஜினிகாந்த்? பரபரக்கும் தமிழக அரசியல் களம்.!

Published : Jun 05, 2026, 07:27 PM IST

Makkal Medai - Latha Rajinikanth Started New Movement: தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் சூடு பிடித்து வரும் நிலையில், லதா ரஜினிகாந்த் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். அது குறித்து இங்கு விரிவாகப் பார்க்கலாம். 

PREV
15
Makkal Medai - Latha Rajinikanth Started New Movement

தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரபுக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. இன்றைய தினம் பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை ‘வீ த லீடர்ஸ்’ என்கிற புதிய அமைப்பை தோற்றுவித்திருக்கிறார். இந்த இயக்கம் தேர்தலில் போட்டியிடும் என்றும் அவர் அறிவித்துள்ளார். மேலும் அவர் ஆரம்பித்துள்ள இயக்கத்தில் இணைவதற்கு இணையதளம் ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளார். குறைந்த நேரத்தில் லட்சக்கணக்கானோர் இயக்கத்தில் இணைத்து சாதனை புரிந்திருக்கிறார் அண்ணாமலை. இந்த பரபரப்பு ஓய்வதற்குள் லதா ரஜினிகாந்த் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

25
மக்கள் மேடை என்ற இயக்கத்தை தொடங்கிய லதா ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் ஏற்கனவே பல அமைப்புகள் மூலம் தொண்டாற்றி வருகிறார். இந்த நிலையில் அவர் ‘மக்கள் மேடை’ என்கிற புதிய இயக்கம் ஒன்றை தொடங்கியிருக்கிறார். மாற்றத்தை விரும்பும் அனைத்து தரப்பு மக்களும் எங்களோடு கைகோர்க்கலாம் என்று அவர் அறிவித்துள்ளார். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து மக்கள் சக்தியாக உருவெடுத்து, பல நல்ல காரியங்களை செய்வோம் என அவர் கூறியுள்ளார். இந்த இயக்கத்தில் சேர்வதற்காக மொபைல் எண்ணும், மின்னஞ்சலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

35
உள்ளூர் தலைவர்களை உருவாக்க விரும்புகிறோம்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், சிட்டிசன் பிளாட்பார்ம் என்ற தங்கள் இயக்கத்தில் சேர்ந்து மக்கள் சேவையாற்ற அவர் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மக்கள் சக்தியாக உருவாகி சமூகத்திற்கு பல சேவைகளை செய்ய முன் வாருங்கள். அனைவரும் ஒன்றாக இணைவோம். ஆக்கபூர்வமான காரியங்களை செய்வோம். மூத்த குடிமக்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ், அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள் என யாராக இருந்தாலும் உங்கள் அனுபவங்களை எங்களுக்கு கொடுக்கலாம். எங்களோடு தொடர்பு கொண்டு தமிழ்நாட்டிற்காகவும் தொகுதிகளுக்காகவும் நீங்கள் வேலை செய்யலாம். உள்ளூர் தலைவர்களை உருவாக்க விரும்புகிறோம் என்று அவர் அறிவித்துள்ளார்.

45
அடிப்படை பிரச்சனைகளுக்குத் தீர்வு

இது வெறுமனே ஒரு அமைப்பாக இல்லாமல் சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒவ்வொரு குடிமக்களுக்கும் பொதுவான தளமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம் ஆகிய அனைத்து துறைகளிலும் தமிழகம் அடைந்து வரும் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும், சாதி, மத, அரசியல் பாகுபாடுகளைக் கடந்து மாநிலத்தின் பொதுவான நன்மைகளுக்காக மக்களை நேர்கோட்டில் இணைப்பதையும், அடித்தட்டு மக்களின் அடிப்படைத் தேவைகளையும், சமூகப் பிரச்சனைகளையும் கண்டறிந்து அவற்றுக்கான தீர்வுகள் காண்பதையும் இந்த இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் கூறியிருக்கிறார்.

55
மக்கள் மேடை இயக்கத்தில் இணைவது எப்படி

லதா ரஜினிகாந்த் குழந்தைகள் நலன் சார்ந்த பணிகள் மற்றும் கல்விப் பணிகளில் ஏற்கனவே நீண்ட அனுபவம் கொண்டவர். ஆஷ்ரம் பள்ளி மூலம் தரமான கல்வியை வழங்கி வருகிறார். தயா பவுண்டேஷன் மற்றும் பீஸ் ஃபார் சில்ட்ரன் போன்ற அமைப்புகளின் மூலம் ஏழைக் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பதற்காக அவர் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். தற்போது அவர் அறிவித்துள்ள மக்கள் மேடை இயக்கம் அவர்களின் சமூகப் பணிகளில் அடுத்த கட்ட பரிமாணமாக பார்க்கப்படுகிறது. இந்த இயக்கத்தில் இணைய விரும்புபவர்கள் 7550080515 என்கிற நம்பரிலும், makkalmedaitn12@gmail.com என்ற இணையதளம் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலைக்கு போட்டியா?

ஏற்கனவே இன்று காலை அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகி புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ள நிலையில், லதா ரஜினிகாந்த் புதிய இயக்கம் ஒன்றை தொடங்கியிருப்பதால் லதா ரஜினிகாந்த் அரசியலுக்கு வர விரும்புகிறாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. அண்ணாமலை மற்றும் லதா ரஜினிகாந்த் இருவரும் இணைந்து செயல்படுவார்களா? இந்த இரண்டு இயக்கங்களும் வருங்காலத்தில் கட்சியாக மாறுமா? இருவரும் இணைந்து தேர்தலில் போட்டியிடுவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Read more Photos on
click me!

Recommended Stories