குஜராத் மாடலைப்போல வாரிசு அரசியல் இல்லாமல், ஊழலுக்கு வழி வகுக்காமல் தமிழ்நாட்டின் நிலைமை என்று மாறுகிறதோ அப்போதுதான் தமிழ், தமிழர்கள் என்று மார்தட்டிக் கொள்ளலாம் என்கிறார்கள் தேசிய அரசியலை உற்று நோக்கும் அரசியல் ஆர்வலர்கள்.
குஜராத் மாநில அமைச்சரவையில் முதல்வர் பூபேந்திர படேலை தவிர, மீதமுள்ள 16 அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர். இந்த மறுசீரமைப்பு எதிர்கால தேர்தல் சவால்களுக்கு முன்னதாக நிர்வாகத்தில் புதிய உற்சாகத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டமன்றத்தில் மொத்தம் 17 முதல்வர் உட்பட அமைச்சர்கள் இருந்தனர். 8 பேர் கேபினட் அமைச்சர்கள். 8 பேர் இணை அமைச்சர்கள். அவர்கள் ராஜினாமா செய்துள்ளது எதிர்கால தேர்தல் சவால்களுக்கு முன்னதாக மாநிலத்தில் தனது தலைமையை புத்துயிர் பெற பாஜக மேற்கொள்ளும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த மறுசீரமைப்பு உள்ளது. குஜராத் அமைச்சரவையில் புதிய முகங்களைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கை அரசு அமைக்கப்பட்டு 2027 சட்டமன்றத் தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்த மறுசீரமைப்பு நடந்துள்ளது.
24
அடித்து ஆடும் பாஜக
எதிர்கால தேர்தல் சவால்களை முன்னிறுத்தி, குஜராத்தில் கட்சியை புத்துயிர் பெறச் செய்யும் பாஜகவின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த மறுசீரமைப்பு அமைந்துள்ளது. ஒட்டுமொத்த கேபினெட்டும் ராஜினாமா செய்து விட்டு பொது அமைச்சரவை என்பது உலகில் ஒரு சில இடங்களில் மட்டுமே நடக்கக்கூடிய அதிசயமாகும். குஜராத்தில் இவர்கள் ஓட்டு போய்விடும், தோற்று விடுவோம், வேறு கட்சிக்கு போய்விடுவார்கள் என்றெல்லாம் பயப்படாமல் ஆரம்பம் முதலில் புகுந்து விளையாடி வருகிறார்கள்.
34
தமிழகத்தில் வாரிசு அரசியல்
ஒரு குடும்பத்திலிருந்து அல்லது ஒரே நபரோ 60 வருடங்கள் தொடர்ந்து அதே பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பதால் ஊழல் புரையோடிப் போவது நமக்கு அனைவருக்கும் தெரிந்த விஷயமாகும். இப்படி அதிரடியாக அமைச்சரவையை மாற்றுவதால் திருடுவதற்கு அவன் எக்ஸ்பர்ட் ஆவதற்குள் அடுத்த பேட்ச் உள்ளே வந்து விடுகிறார்கள். இதனால் புரையோடிய ஊழல் என்ற விஷயம் தடுக்கப்படுகிறது. திமுகவில் 60 வருடமாக ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் துரைமுருகன் இன்னமும் இருக்கிறார்.
அதிமுகவிலும் பலர் 25, 30 வருடங்களாக பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஆண்டு முடிந்ததும் அவர்களது வாரிசுகள் எம்.பி, அமைச்சர்களாகி விடுகிறார்கள். ஆக தமிழகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே வாரிசு வாரிசாக பதவிக்கு வருகிறார்கள்.
இது இரு திராவிடக் கட்சிகளிலும் நடக்கிறது. குஜராத்தில் பாஜக எடுத்த முடிவைப்போல தமிழகத்தில் உள்ள கட்சிகள் ஒருபோதும் முன் வராது. காரணம் இங்கு வாரிசு அரசியலும், ஊழலும் புரையோடிப்போய் விட்டது. திராவிட மாடல் எனக் கூறிக்கொண்டு தமிழகத்தை சீரழித்துக் கொண்டிருப்பதுதான் நடக்கிறது. குஜராத் மாடலைப்போல வாரிசு அரசியல் இல்லாமல், ஊழலுக்கு வழி வகுக்காமல் தமிழ்நாட்டின் நிலைமை என்று மாறுகிறதோ அப்போதுதான் தமிழ், தமிழர்கள் என்று மார்தட்டிக் கொள்ளலாம் என்கிறார்கள் தேசிய அரசியலை உற்று நோக்கும் அரசியல் ஆர்வலர்கள்.