ஆபரேஷன் -39..! கம்பு சுத்தும் அந்த 3 பேர்..! ஆட்டத்தை தொடங்கிய செந்தில் பாலாஜி..!

Published : Oct 16, 2025, 07:07 PM IST

மீண்டும் தேவையில்லாமல் டாஸ்மாக் விவகாரங்களில் தனது பெயர் அடிபடக்கூடாது என செந்தில் பாலாஜி கறாரான முடிவெடுத்துள்ளார். க்ளீன் இமேஜ், உறுதியான வெற்றி என்பதை நோக்கி செல்கிறார் செந்தில் பாலாஜி’’ என்கிறார்கள் கோவை மாவட்ட திமுக தொண்டர்கள்.

PREV
14

தமிழக அரசியல் வரலாற்றில் கோவை மண்டலத்தில் நூற்றுக்கணக்கான அதிமுக முன்னாள் கவுன்சிலர்கள் இன்றளவும் தூக்கத்தில்கூட ஒரு நபரை திட்டியும், சாபமிட்டும் கொண்டிருக்கிறார்கள் என்றால் அது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியைத் தான் என்பது ஊரறிந்த உண்மை என்றே சொல்லலாம்.

அந்தளவுக்கு இரண்டு மூன்று முறை கவுன்சிலராக இருந்தவர்கள், பிரச்சாரத்திற்கே போகாமல் ஜெயித்தவர்கள், அண்ண போஸ்டில் வென்றவர்கள் என அந்த மண்டலம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் கவுன்சிலர்கள் தோற்றுப் போன நிகழ்வு இன்று வரை கண்ணாடி முன் நின்று எப்படி? எப்படி? என்று அவர்களைப் பார்த்து அவர்களே கேட்டுக் கொண்டிருக்கும் நிலையில் வந்து நிறுத்தி உள்ளது. அவர்களை எதிர்த்து வெற்றி பெற்றவர்களும் இன்றைக்கு வரை தங்களது வெற்றியை ஒரு விபத்து போல் தான் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். எதிர்பாராத தோல்வி ஆத்திரத்தில் இருந்த பலபேர் செந்தில் பாலாஜி ஜெயிலுக்கு போன போது மொட்டை அடித்து சாமிக்கு நேர்த்தி கடன் செலுத்தி கொண்டாடி தீர்த்த நிகழ்வுகளும் நடைபெற்றன.

இந்நிலையில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தனது ஆட்டத்தை காட்ட வரிந்து கட்டிக் கொண்டு நிற்கும் செந்தில் பாலாஜியை கண்டு, மறுபடியும் முதல்ல இருந்தா என்கிற ரீதியில் கலங்கித்தான் போயுள்ளனர் இலை தரப்பினர். அதன் வெளிப்பாடு தான் சமீபத்தில் கோவை விமான நிலையம் வந்த செந்தில் பாலாஜியை, எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்க வந்த அதிமுகவினர் கோஷம் எழுப்பி அதிர வைத்தனர். அதுமட்டுமல்லாமல், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் செந்தில் பாலாஜி சிறைக்கு போனது போல ஒரு சம்பவம் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பும் நடக்காதா? என அவருக்கு எதிராக கேரளா சென்று மலையாள மாந்திரீகம், பில்லி சூனிய வேலையிலும் இறங்கி விட்டனர் கோவை அதிமுகவினர்.

24

கோவை மண்டலத்தைப் பொறுத்தவரையில், ஒரு கால் நூற்றாண்டு கால அளவில் அதிமுகவே அசைக்க முடியாத சக்தியாக இருந்து வந்துள்ளது. கடந்த 2021 நடந்த சட்டமன்றத் தேர்தலில் கூட கோவை மாவட்டத்தின் பத்து தொகுதிகளையும் அக்கட்சியே கைப்பற்றி சாதனை படைத்தது. திமுக ஆட்சிக்கு வந்தும் ஒரு அமைச்சர் கூட இல்லாத நிலையில், அதிமுக எம்எல்ஏக்களே அட்ராசிட்டி செய்து வந்தனர். அதன் பிறகு, பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டதும் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அந்தளவிற்கு அசுரத் தாண்டவம் ஆடிய செந்தில் பாலாஜி, அப்போது நடந்த உள்ளாட்சி நகர்ப்புற தேர்தலில் நூறு சதவிகித வெற்றியை பெற்று தலைமைக்கு மகிழ்ச்சியையும், அதிமுகவிற்கு அதிர்ச்சியையும் ஒரு சேர தந்தார்.

அப்படி உள்ளாட்சி தேர்தல் அதன் பிறகு நடந்த நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் திமுக மாபெரும் வெற்றி பெற்றிருந்தாலும், வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தான் கோவை மண்டலம் யாருடைய கோட்டை என்பதனை முடிவு செய்யும். அதற்காகத் தான் கோவை மாவட்டத்தில் உள்ள பத்து தொகுதிகளையும், கோவை மண்டலத்தில் உள்ள 39 தொகுதிகளையும் மொத்தமாக தூக்க வேண்டும் என கங்கனம் கட்டி களத்தில் நிற்கிறார் செந்தில் பாலாஜி.

எனவே, செந்தில் பாலாஜி தனது ஆப்ரேஷனை, கோவை மாநகர் மாவட்டத்தில் இருந்து தொடங்கி இருப்பதாகவே அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர். எப்படியென்றால், கோவை மாநகர் மாவட்ட செயலாளராக இருந்த முன்னாள் சிங்காநல்லூர் எம்.எல்.ஏ கார்த்திக்கை பதவியை விட்டு தூக்கி முதல் விக்கெட்டை வீழ்த்தி உள்ளார். அவருக்கு பதிலாக பீளமேடு பகுதி செயலாளர் செந்தமிழ் செல்வன் கட்சித் தலைமையால் நியமிக்கப்பட்டார். அது குறித்துஒரு சிலர் விஷமத்தனமான தகவல்களை ஒருபுறம் பரப்பி கொண்டிருந்தாலும், அதனை மிகச்சரியான நடவடிக்கை என்று கட்சியில் ஏராளமான பேர் ஆமோதிக்கவே செய்கின்றனர்.

34

கரூர் துயர சம்பவ கூட்ட நெரிசலில் தவெக, அதிமுக, பாஜக என திமுகவை குற்றம்சாட்டத்தொடங்கி உள்ளன. சரியான பாதுகாப்பு தரவில்லை. மெத்தனமாக இருந்து விட்டார்கள் என தொடர் விமர்சனம் செய்து வருகின்றனர். இதற்கு பின்னால் எதிர்கட்சிகளின் நுட்பமான அரசியல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. செந்தில் பாலாஜி மேற்கு மண்டலத்தில் தொடர்ந்து கோலோச்சி வருகிறார். இது பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. அதனால்தான் அவரை டார்கெட் செய்து அவருக்கு எதிரான அரசியலை தீவிரப்படுத்தி வருகிறார்கள் எனவும் கூறப்படுகிறது.

பாஜகவின் மேலிட பொறுப்பாளர் பாண்டா உள்ளிட்டவர்கள் குழு சமீபத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிக அளவிலான தொகுதிகளை பாஜகவினர் கேட்டுள்ளனர். மிக முக்கியமாக மேற்கு மண்டலத்தில் குறிப்பாக கோவை மாவட்டத்தில மூன்றில் இருந்து ஐந்து தொகுதிகள் வேண்டும் என பாஜக எதிர்பார்ப்பதாகக் கூறப்படுகிறது. உள்துறை அமைச்சரான அமித் ஷாவின் தனிப்பட்ட எதிர்பார்ப்பு கோவையில் அதிக தொகுதிகள் பெற வேண்டும் என்பதுதான். இவை எல்லாமே கூடுதலாக செந்தில் பாலாஜிக்கு அழுத்தங்களையும், நெருக்கடிகளையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில்தான் செந்தில் பாலாஜியின் ரூட்டை கிளியர் ஆக்கித் தருவது, கோவையை திமுக பக்கம் கொண்டு வரவேண்டும். மேற்கு மண்டலத்தில் முழுமையாக திமுகவை வெற்றி பெற வைக்க வேண்டும் என மறுபடியும் இங்கே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அழைத்து வந்து பல திட்டங்களை தொடங்கி வைத்திருக்கிறார் செந்தில் பாலாஜி. கொங்கு மண்டலத்தில் உள்ள ஆறு மாவட்டங்களில் 39 தொகுதிகள் அவருடைய பொறுப்பில் இருக்கிறது. இதில் திமுக கடந்த முறை வெற்றி பெற்றது வெறும் 16 தொகுதிகளில் மட்டும்தான்.

23 எம்எல்ஏக்கள் அதிமுக கூட்டணி வசம் இருக்கிறார்கள். இதை இந்தமுறை 16ல் இருண்நு 39 ஆக மாற்ற வேண்டும் என்கிற ஒரே அஜெண்டாவை நோக்கி தீவிரமா பயணிக்கிறார்கள் செந்தில் பாலாஜி. முதல் கட்டமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதியை அழைத்து வந்து தொடர்ந்து கூட்டங்களை நடத்துவது, நலத்திட்டங்களை ஒதுக்குவது என திமுக நிர்வாகம் கோவையை தனியாக கவனித்து வருகிறது. இரண்டாவதாக சமுதாய ரீதியிலாக ஒவ்வொரு வாக்குகளையும் கவர் செய்வது. இங்கு கொங்கு வெள்ளாள கவுண்டர் சமுதாயத்தினர் மிக முக்கியமானவர்களாக, வெற்றி, தோல்வி தீர்மானிக்க கூடியவர்களாக இருக்கிறார்கள். விடுதலைப்போராட்ட வீரர் தீரன் சின்னமலைக்கான முக்கியத்துவத்தை அளிப்பது, விஞ்ஞானி ஜிடி நாயுடு பெயரை பாலத்துக்க்கு சூட்டுவது.

44

வெற்றி, தோல்வியை தீர்மானிக்கிற வகையில் கோவையில் நாயுடு சமுதாயத்தினரும் முக்கியமானவர்களாக இருக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு செயலுக்கு பின்னும் ஒரு நுட்பமான அரசியலும் தொடர்ந்து வருகிறது. சத்தம் இல்லாமல் தொகுதிக்கு மூன்று வேட்பாளர்கள் என்கிற அடிப்படையில ஒரு தனியாக வேட்பாளர் பட்டியலையும் தயார் செய்து கொண்டு செய்து வைத்து இருக்கிறார் செந்தில் பாலாஜி. மிக முக்கியமாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவை மண்டலத்தில் பொறுப்பாக இருந்தார்.

இப்போது எடப்பாடி பழனிசாமியும் அங்கு தனிக் கவனம் கவனம் செலுத்த ஆரம்பித்து இருக்கிறார். இன்னொரு பக்கத்தில் அண்ணாமலை, விஜய். இந்த மூன்று பேரையும் டார்கெட் செய்து தன்னுடைய வேலைகளையும் மாற்றி மாற்றி ஆட்டத்தை கலைத்து போட்டு ஆட ஆரம்பித்து இருக்கிறார் செந்தில் பாலாஜி. இந்த மூன்று பேரும் ஒன்றாக வந்தால் எப்படி அணுகுவது? இந்த மூன்று பேரில் இரண்டு அல்லது தனித் தனியாக பிரிந்து வந்தால் எப்படி அணுகுவது? என தீவிரமான ஆலோசனைகளும் ஓடிக்கொண்டிருக்கின்றன். நிச்சயமாக இந்த 39 தொகுதிகளிலிம் சக்சஸ் செய்து விடுவார் என செந்தில் பாலாஜியின் நகர்வுகள் பகிர்ந்து அவருடைய அதிதீவிரமான ஆதரவாளர்கள்.

செந்தில் பாலாஜி கோவையில் போட்டியிடப் போகிறாரா? என்கிற பேச்சும் ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆனால், இல்லை. அவரை பொறுத்தவரைக்கும் கரூரில்தான் போட்டியிடப் போகிறார். கோவையிலும் கவனம் செலுத்தி வருவதால் அங்கு செந்தில் பாலாஜி போட்டியிடலாம் என சொல்லி வைப்பதன் மூலம் ஒரு பாசிட்டிவ் அலையை உருவாக்கலாம் என நினைக்கிறது திமுக. அதே போல டாஸ்மாக் விவகாரங்களில் இப்போது செந்தில் பாலாஜி தரப்பினர் ஈடுபடுவதில்லை. லைசென்ஸ் இல்லாத பார்கள் கூட இயங்குவதில்லை. ஆகையால் மீண்டும் தேவையில்லாமல் டாஸ்மாக் விவகாரங்களில் தனது பெயர் அடிபடக்கூடாது என செந்தில் பாலாஜி கறாரான முடிவெடுத்துள்ளார். க்ளீன் இமேஜ், உறுதியான வெற்றி என்பதை நோக்கி செல்கிறார் செந்தில் பாலாஜி’’ என்கிறார்கள் கோவை மாவட்ட திமுக தொண்டர்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories