பாமகவின் உள் கோஷ்டி பிரச்சினைகளுக்கு இடையே, ராமதாஸ் "பலமான கூட்டணி அமையும்" என்று கூறியிருந்தார். ராமதாஸ் ஒரு பேட்டியில், "எதிர்காலத்தில் தவெகவுடன் பேசுவது குறித்து மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு செய்வோம்" என்று தெரிவித்து இருந்தார்.
பாமக தற்போது ராமதாஸ் அணி, அன்புமணி அணி என இரண்டு அணிகளாகப் பிரிந்துள்ளது. ராமதாஸ் அணி பாரம்பரிய வன்னியர் ஆதரவு, தவெக போன்ற புதிய கட்சிகளுடன் கூட்டணி விருப்பத்துடன் தேர்தலை சந்திக்க திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. அன்புமணி அணி என்.டி.ஏ கூட்டணியில் சேர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. பாமகவின் உள் கோஷ்டி பிரச்சினைகளுக்கு இடையே, ராமதாஸ் "பலமான கூட்டணி அமையும்" என்று கூறியிருந்தார். ராமதாஸ் ஒரு பேட்டியில், "எதிர்காலத்தில் தவெகவுடன் பேசுவது குறித்து மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு செய்வோம்" என்று தெரிவித்து இருந்தார்.
23
தவெகவிடம் மாற்றம்
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், ‘‘நான் மருத்துவமனையில் இருந்தபோது அனைத்து அரசியல் கட்சியினரும் நேரிலும், தொலைபேசியிலும் நலம் விசாரித்தனர். ஒரு கட்சி மட்டும்தான் நலம் விசாரிக்கவில்லை. அது புதிக ஆரம்பிக்கப்பட்ட கட்சி’’ என பாமக நிறுவனர் ராமதாஸ் ஆதங்கப்பட்டுள்ளார்.
தவெக ஆரம்பம் முதலே திமுக அரசியல் எதிரி, பாஜக கொள்கை எதிரி எனக் கூறி வருகிறார். அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்தை நடத்தியதாகக் கூறப்பட்டது. ஆனால் அதிமுகவோ, பாஜகவுடன் கூட்டணி அமைத்தது. அப்போது, விஜய் தலைமையில், பாமக, தேமுதிக, ஓபிஎஸ் அணி, டிடிவி.தினகரன் அணி கூட்டணி சேர வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், கரூர் சம்பவத்திற்கு பிறகு தவெகவிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறி வருகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
33
தவெகவின் மவுசு
அதிமுக- பாஜக கூட்டணிக்கு பேசி வருவதாகவும், காங்கிரஸுடன் விஜய் கூட்டணிக்கு பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. இப்போது, விஜய் தன்னிடம் நலம் விசாரிக்கவில்லை என ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார் ராமதாஸ். இது ராமதாஸ் விஜய் மீது வைத்திருக்கும் மவுசாகவே பார்க்கப்படுகிறது. நாதக, திமுக தவிர மற்ற அனைத்து கட்சிகளும் தவெக கூட்டணியை விரும்புவதாக தெரிகிறது. அந்த அளவுக்கு தவெகவின் மவுசு கூடியிருப்பதாக அக்கட்சி தொண்டர்கள் புலங்காகிதப்படுகின்றனர்.