திமுக பேச்சாளரை ஓடவிட்ட விவாதம்..! கரூர் சம்பவம் விபத்து என்று ஒத்துக் கொண்டதால் பரபரப்பு

Published : Oct 16, 2025, 11:56 AM IST

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் மரணத்துக்கு விஜய் மட்டுமே பொறுப்பு என்கிற குற்றச்சாட்டை அழுத்தமாக முன் வைத்து வருகிறது திமுக. இந்நிலையில்,  திமுக பேச்சாளர் செந்தில்வேல் கரூர் சம்பவம் விபத்து என்பதை ஒப்புக் கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV
14
திமுகவுக்கு சொம்படிக்கிறார்

திமுகவுக்கு ஆதரவாக வலிந்து பேசிவரும் நபர்களில் முக்கியமானவர் தமிழ்கேள்வி செந்தில்வேல். திமுகவுக்காக பல விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர் எதிர் கருத்தினரை விட்டுக்கொடுக்காமல் அடிப்பது அவரது பாலிஸி. இதனால்தான் அவரை, திமுகவுக்கு சொம்படிக்கிறார் என பலரும் கூறிவருகின்றனர். முன்னாள் பத்திரிகையாளரான அவர் இப்போது முழு நேர திமுக பேச்சாளராக வளம் வருகிறார்.

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் மரணத்துக்கு விஜய் மட்டுமே பொறுப்பு என்கிற குற்றச்சாட்டை அழுத்தமாக முன் வைத்து வருகிறது திமுக. இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய திமுக பேச்சாளர் செந்தில்வேல் கரூர் சம்பவம் விபத்து என்பதை ஒப்புக் கொண்டு நிகழ்ச்சியை பாதியில் விட்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

24
ஏன் அனுமதி கொடுத்தீர்கள்?

அந்த விவாத நிகழ்ச்சியில், ‘‘கரூர் சம்பவம் நடந்து 20 நாள் கழித்து செந்தில்வேல் என்ன சொல்கிறார் என்றால் நிகழ்ச்சி நடந்த இடத்தில் கழிப்பறைகள் இல்லை, பெண்கள் போவதற்கான வழியில்லை என்கிறார். அப்படியானால் இதெல்லாம் எதுவுமே இல்லாத போது அடிப்படையான சில விஷயங்களை அரசாங்கத்தால் கொடுக்க முடியவில்லை. இதெல்லாம் இல்லாத பட்சத்தில் அந்த இடத்திற்கு ஏன் அனுமதி கொடுத்தீர்கள் ? இந்த மாதிரி இடத்தில்தான் நாங்கள் அனுமதி கொடுப்போம்.

34
முழு காரணமும் திமுகதான்

இந்த இடத்தில் மட்டும் தான் நீங்கள் செய்ய வேண்டும். இந்த மாதிரி சாலையில் நாங்கள் கொடுக்க மாட்டோம். இது ஆம்புலன்ஸ் போகாத ரோடு. அது மருத்துவமனைக்கு செல்லும் ரோடு. இங்கே அனுமதி கிடையாது. தீவு திடலில் பண்ணுங்கள். இந்த கிரவுண்டில் பண்ணுங்கள். இந்த இடத்தில் பண்ணுங்கள். இப்படி செய்யுங்கள். இந்த இடத்தில் செய்தால் உங்களுக்கு கழிப்பறை வசதி இருக்கிறது என்றெல்லாம் கட்டுப்பாடு வைத்திருப்பது திமுக அரசு. ஆக இந்த சம்பவத்திற்கு முழு காரணமும் திமுகதான் என்று அரசியல் விமர்சகர் காமேஷ் தெரிவித்தார்.

44
விபத்து என்று அவரே ஒப்புக்கொண்டார்

இதற்கு பதில் அளித்த செந்தில் வேல் இது ஒரு விபத்து. எல்லோரும் சேர்ந்து வாதம் செய்து, வாதம் செய்து எங்கே கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறீர்கள் பாருங்கள். இதை மலினமான அரசியலை நோக்கி நகர்த்தி விட்டீர்கள். நான் இந்த விவாதத்தில் பங்குதாரராக இருக்கவில்லை, விரும்பவில்லை. நான் விடைபெறுகிறேன் நன்றி’’ எனக் கூறிவிட்டு கிளம்பு முயன்றார். அப்போது நெறியாளர் நீங்கள் தொடர்ந்து நிகழ்ச்சியில் இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு அரசியல் விமர்சகர் காமேஷ், ‘‘செந்தில் வேல் இதுவரை கரூர் விவகாரத்தை வேறு மாதிரி சொல்லி வந்தார். இப்போது விபத்து என்று அவரே ஒப்புக்கொண்டார்’’ என தெரிவித்தார். இதனால் மேலும் வெறுப்பான செந்தில் வேல் நிகழ்ச்சியில் இருந்து பாடியிலேயே கிளம்பிவிட்டார்.

Read more Photos on
click me!

Recommended Stories