‘‘நயினார் நாகேந்திரனின் முழு கவனமும் இப்போது அண்ணாமலை எதிர்ப்பில் மட்டுமே பயணிக்கிறதே தவிர, திமுக என்கிற எதிர்ப்பை மறந்து விட்டார்’’ என குற்றம்சாட்டியுள்ளார் திருச்சி சூர்யா.
திமுக சீனியரும், திருச்சி எம்.பி.,யுமான திருச்சி சிவாவின் மகன் திருச்சி சூர்யா. 2022-ஆம் ஆண்டு மே மாதம் பாஜகவில் இணைந்து, ஓபிச்நி அணியின் மாநில பொதுச் செயலாளராக பொறுப்பு வகித்தார். ஆனால், சமூக வலைதளங்களில் கட்சி தலைமை, பிற தலைவர்கள் மீது விமர்சனங்கள், சர்ச்சைக்குரிய பதிவுகள் போன்றவற்றால் அவர் மீண்டும் மீண்டும் கட்சி சார்பில் ஒழுங்குநடவடிக்கை எதிர்கொண்டார். 2024- கட்சி கட்டுப்பாட்டை மீறி களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி, பாஜகவின் அடிப்படை உறுப்பினருட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்பட்டார்.