திமுக வேட்பாளர் பட்டியலை கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாரின் தயார் செய்ய தொடங்கிட்டார் எனக் கூறப்படுகிறது. 2026 தேர்தலில் யாருக்கெல்லாம் எம்.எல்.ஏ., சீட் என திமுக வட்டாரங்களில் மில்லியன் டாலர் கேள்வியாக இருந்து வருகிறது. திமுக மாவட்ட செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள், தனியார் ஏஜென்சிகள், உளவுத்துறை ரிப்போர்ட் என பல இடங்களில் இருந்து முதல்வர் கைக்கு வந்திருக்கிற வேட்பாளர்கள் லிஸ்டில் முதல்வரும், தான் தரப்பில் எடுத்து வைத்திருக்கிற ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்டை ஒப்பீடு செய்து யாருக்கெல்லாம் சீட்டு கொடுக்கலாம் என மாவட்ட வாரியாக வேட்பாளர்களை தேர்வு செய்கிற வேலைகளை ஆரம்பித்து விட்டார். ஆனால், அவர்களுக்கான தொகுதிகளை மட்டும் இன்னும் முடிவு செய்யவில்லை என்கிறார்கள்.
காரணம், கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடிந்ததும் தொகுதிகள் முடிவாகும் எனச் சொல்கிறார்கள். அதே சமயம் அதிமுக முகாமில் யாரெல்லாம் வேட்பாளர்கள் என்கிற ஒரு லிஸ்ட்டும் திமுக முகாமுக்கு வந்து சேர்ந்து இருக்கிறது என்கிறார்கள். இவர்களை எதிர்க்கிற ஆளுமையாகவும் திமுக வேட்பாளர்கள் வேட்பாளர் லிஸ்ட் இருக்க வேண்டும் என ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.