சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில், தலைவர்கள் ஒருமனதாக தீர்மானத்தை வெளியிட்டனர். இந்தத் தீர்மானத்தில், ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் கடுமையாகக் கண்டிக்கப்பட்டுள்ளது. சதிகாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தண்டனை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், அதில் பாகிஸ்தான் பெயரை குறிப்பிடப்படவில்லை.
பிரதமர் மோடி ஆற்றிய உரையில், ‘‘பயங்கரவாதத்திற்கு எதிரான இரட்டை நிலைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்ல. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு வெளிப்படையான சவால். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பினர்கள் ஒன்றுபட வேண்டும். ஏகபோகம், ஆதிக்க கொள்கை ஆபத்தானது.
அமெரிக்காவின் பாதுகாப்புவாத, ஒருதலைப்பட்ச மற்றும் மேலாதிக்க அணுகுமுறை. எல்லை தாண்டிய பயங்கரவாதம், பிரிவினைவாதம், தீவிரவாதம் குறித்து பூஜ்ஜிய சகிப்புத்தன்மை அணுகுமுறைக்கு இந்தியா தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறது.