தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆகஸ்ட் 30ம் தேதி முதல் நான்காவது நாளாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் காங்கிரஸ் எம்.பி., சசிகாந்த் செந்தில்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., அலுவலகம் அருகில் மூன்றாம் நாளாக நேற்றும் உண்ணாவிரதம் இருந்தார். அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து போலீசார் அவரை சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் தன்னிச்சையாக உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
சசிகாந்த் செந்திலின் செயல்பாடுகள் குறித்து அரசியல் விமர்சகரும், சமீபத்தில்ம் பாஜகவில் இணைந்தவருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் பல்வேறு சந்தேகங்களை முன் வைத்துள்ளார். இது குறித்து அவர், ‘‘ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் என்பவர் காங்கிரஸில் சேர்ந்தார். கூட்டணியில் டெல்லி தலைமை சிபாரிசின் பேரில் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினராக ஆனார்.