அண்மையில் மாமல்லபுரத்தில், திமுக எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான ‘கால்டன் சமுத்திரா’ ஹோட்டலில் சுசீலா-ராமதாஸ் இணையரின் 50-வது திருமண விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் படங்கள், வீடியோக்கள் என அனைத்தும் வெளியாகின. இதில் சுசீலாவின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். இந்த சம்பவம் பாமகவில் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், பாமக இரண்டு அணியாகத்தான் 2026 தேர்தலை சந்திக்கும் எனச் செல்லப்படுகிறது. கட்சியில் அப்பா- மகனுக்கு இடையே எழுந்துள்ள கருத்து வேறுபாடு இனி முடிவுக்கு வருமா? என்பது சந்தேகமே என்று அன்புமணி, ராமதாஸ் என இரு தரப்புமே சொல்ல ஆரம்பித்து இருக்கிறது. அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் அனுப்பியதும் அதை உறுதிப்படுத்துவதாக கூறப்படுகிறது. குறிப்பாக அன்புமணி பொதுக்குழுவில் காலிச்சேர் போட்டு ராமதாசை அசிங்கப்படுத்தியதாக ராமதாஸ் தரப்பு கடும் கோபத்தில் இருக்கிறது.