திமுக கூட்டணியை விட்டு, பத்துத் தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியுற்று வரும் எடப்பாடியிடமோ, ஒரு தேர்தலைக்கூட சந்தித்திடாத விஜயிடமோ காங்கிரசும், கம்யூனிஸ்ட்டும் வருவார்கள் என்பது கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுக்கு காத்திருக்கும் யோகிபாபு கதை தான்
விஜய்- காங்கிரஸுடன் கூட்டணிக்கு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும், அதற்காக ராகுல் காந்தியை விஜய் விரைல் சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தக் கணிப்புகளை பொய்யாக்கும் விதமாக சில தகவல்கள் வெளியாகி உள்ளன.
‘‘காங்கிரஸுடன் திமுக கூட்டணி தொடர்கிறது என்ற உறுதியை சிதைக்கிற வேலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சில எம்.பி-க்களே இறங்கி இருக்கிறார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த சில காங்கிரஸ் எம்.பி-க்களே இறங்கி இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. மிகவும் உறுதிப்பட சில வேலைகளை அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக விஜய்யிடம், காங்கிரஸ் கூட்டணியை கொண்டு போய் சேர்த்து வேண்டும் என நினைக்கிறார்கள்.
கேரளா அரசியலை மையப்படுத்தி அங்கே முதலமைச்சராகிவிட வேண்டும் என நினைக்கிற வேணுகோபாலை மனதில் வைத்து சில வேலைகள் நடக்கிறது. அதே போல தமிழகத்திலும் சில வேலைகளை காங்கிரஸார் திட்டமிட்டுள்ளனர். அது திமுகவின் கவனத்திற்கும் சென்றிருக்கிறது. திமுக என்ன பெரிதாக சீட்டு கொடுத்துவிட்டது? திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி வேண்டாம் என திமுகவுக்கு எதிராக அவர்களால் வெற்றிபெற்ற சில காங்கிரஸ் எம்.பி-க்களே சில வேலைகளை செய்கிறார்கள்.
24
ராகுல் சொல்லித்தான் விஜய் கட்சி ஆரம்பித்தார்
விஜயை 10 அல்லது 15 நாட்களுக்குள் ராகுல் காந்தியிடம் சந்திக்க வைக்க வேண்டும் என சிலர் முயற்சிகளில் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது. காங்கிரஸை விஜய் விமர்சனம் செய்யாததற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ‘‘நாம்தான் ராகுல் காந்தியை சந்திக்கப் போகிறோமே..” என அரசியல் கணக்கீட்டை அரசியல்வாதி விஜய் போட்டிருக்கலாம். ஆனாலும் அது அவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. ஆனாலும் விஜய்யின் அரசியல் நகர்வுகளில் இதுவும் ஒன்றாக இருக்கலாம்’’ என்று கூறப்ப்பட்டு வந்தது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில், ‘‘காங்கிரஸில் பொறுப்புக் கேட்டவர் நடிகர் விஜய். உங்களுக்கு இருக்கும் செல்வாக்குக்கு நீங்கள் கட்சியே தொடங்கலாம் என்று ஐடியா கூறினார் ராகும். ராகுல் சொல்லித்தான் விஜய் கட்சி ஆரம்பித்தார். காங்கிரஸில் இருந்ததால் எனக்கு அந்த உண்மை தெரியும்’’ எனக் கொளுத்திப்போட்டார் பாஜக பிரமுகர் விஜயதரணி.
34
கோலமாவு கோகிலா கதைதான்..!
இதனை விமர்சித்துள்ள அரசியல் விமர்சகரும், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியருமான மருது அழகுராஜ், ‘‘தொடர்ந்து மொத்தத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று வரும், திமுக கூட்டணியை விட்டு விட்டு, பத்துத் தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியுற்று வரும் எடப்பாடியிடமோ, ஒத்தத் தேர்தலில் கூட வெற்றி பெற முடியாத சீமானிடமோ அல்லது ஒரு தேர்தலைக்கூட இதுவரை சந்தித்திடாத விஜயிடமோ காங்கிரசும், கம்யூனிஸ்ட்டும் வருவார்கள் என்பது கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுக்கு காத்திருக்கும் யோகிபாபு கதை தான்’’ எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கடலூரில் இதுகுறித்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, ‘‘விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து 10 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பெற்றார். ஆனால், அந்தக் கட்சி தற்போது எந்த நிலையில் உள்ளது? அதேபோல் ஆந்திராவில் சிரஞ்சீவி கட்சி தொடங்கினார். பின்னர் தனது கட்சியை காங்கிரஸுடன் இணைத்துக் கொண்டார். விஜயகாந்த், சிரஞ்சீவிக்கு ஏற்பட்ட நிலைதான் விஜய்க்கும் ஏற்படும்’’ எனத் தெரிவித்துள்ளார்.
விஜய் - காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியான நிலையில் விஜயை கடுமையாக விமர்சனம் செய்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை பேசி இருப்பது விஜய்- காங்கிரஸ் கூட்டணி தகவல்களை பொய்யாக்கும் வகையில் அமைந்துள்ளது.