செப்டம்பர் 15ம் தேதி திமுகவினை கடுப்பேற்றும் வகையில், அண்ணாதுரை பிறந்த நாளில் விஜய் தனது மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
கூட்டணி குறித்து சில சிறிய கட்சிகளுடன் விஜய் பேச்சு நடத்தி வருகிறார். காங்கிரஸ் கூட்டணிக்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலை சந்திக்க திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாஜக, திமுகவை விக்கிரவாண்டியில் கடுமையாக விமர்சித்த விஜய் காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கவில்லை. அடுத்து மதுரையில் நடந்த மாநாட்டிலும் திமுக, பாஜகவை விமிஅர்சித்த விஜய்ப் அதிமுகவையும் சீண்டினார். ஆனால், காங்கிரஸ் பற்றி அவர் எங்கேயுமே பேசவில்லை. எப்போதோ ஆண்ட கட்சி என ஆகிவிட்டது காங்கிரஸ் கட்சி. 10 வருடங்களுக்கு முன்னால் அவர்கள் செய்ததையெல்லாம் இப்போது பேச வேண்டிய அவசியம் இல்லை என விஜய் நினைத்து இருக்கலாம். காங்கிரசை விஜய் இழுக்காததை புதிதாக பார்க்க முடியாது.