இந்த நிகழ்ச்சியிலி சைதா ஹமீது, 'அசாம் ஒருபோதும் இப்படி இருந்ததில்லை. அது இப்போது ஒரு அரக்கனைப் போல மாறிவிட்டது. அது ஒரு ஆபத்தான இடமாக மாறிவிட்டது. முஸ்லிம்களுக்கு எதிரான பழிவாங்கல். அசாமில் மக்கள் நல்ல நோக்கத்துடன் மியான் என்று சொல்வார்கள். ஆனால், இப்போது மியான் என்ற வார்த்தை ஒரு தவறான வார்த்தையாக மாறிவிட்டது' என்று கூறினார். அப்போது, கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால் சற்று நேரத்தில் அவரது தொனி சற்று மென்மையாகிவிட்டது.
பிறகு அவர், 'சில வங்கதேசத்தினர் வந்திருந்தால், அவர்களுடன் அமர்ந்து, அவர்களுடன் விவாதித்து, அவர்களைத் திருப்பி அனுப்புங்கள்...' என்று சொல்லத் தொடங்கினார். ஆனால், அவரது பேச்சை பாஜகவும்,அரசாங்கமும் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளன.
பாஜக தலைவர் ராகேஷ் சின்ஹா, "இதை விட பெரிய தேச விரோத அறிக்கை இருக்க முடியாது. ஹமீது ஜி நம்மை மிகவும் நேசிக்கிறார் என்றால், அவர் ஏழு நாட்கள் வங்கதேசத்தில் வாழ வேண்டும். இந்த நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் உடைக்கும், இந்த நாட்டில் ஊடுருவல்காரர்களாக மாறி இந்த நாட்டின் மக்கள்தொகையை மாற்றும் வங்கதேசத்தினரை வெளிப்படையாக ஆதரிப்பது, நாட்டில் படித்த மற்றும் நல்ல நிலையில் உள்ள மக்கள் தேச விரோத சக்திகளின் முகவர்களாக செயல்படுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. அவர்களை இந்தியாவுக்கு எதிரான சக்திகளின் குரல் கொடுக்கும் முகவர்களாக நான் கருதுகிறேன். அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு ‘‘அவர் மனிதநேயத்தின் பெயரால் தவறாக வழிநடத்துகிறார். சையதா ஹமீது சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு நெருக்கமாக இருக்கலாம். ஆனால் சட்டவிரோத ஊடுருவல்காரர்களை ஆதரிக்கக்கூடாது' எனத் தெரிவித்துள்ளார்.