‘இதுதான் திமுகவின் வித்தை..! விஜயை சமாளிக்க களமிறக்கப்படும் 4 நடிகைகள்’..! பழ.கருப்பையா சொல்லும் பலே ரகசியம்..!

Published : Aug 26, 2025, 02:14 PM IST

விஜயின் லைம்லைட் சினிமாவின் லைம்லைட். மாநாட்டு மேடையில் எம்.ஜி.ஆர் பற்றி பேசுகிறார். விஜயகாந்த் பற்றி பேசுகிறார். சிங்கம் என்று கனைக்கிறார். அதை தவிர இந்த கூட்டம் கலைந்து செல்லும்போது புதிய கருத்தை பெற்றதா?

PREV
15

விஜயை மையமிட்டு அரசியல் விவாதங்கள் அனல் கிளப்பி வருகின்றன. பாஜக, திமுக, அதிமுக என அனைத்துக் கட்சிகளையும் ஒரு சேர மதுரை மாநாட்டில் விமர்சித்து பேசினார் விஜய். மு.க.ஸ்டாலினை அங்கிள் என விளித்தார். தன்னை முதல்வர் வேட்பாளர் என முழக்கமிட்டார்.

இந்நிலையில், விஜயின் செயல்பாடுகள் குறித்தும் அவருக்கு எதிரான திமுகவின் திட்டங்கள் குறித்தும் தனது கருத்துக்களை வெளிப்படுத்தி இருக்கிறார் முன்னாள் எம்.எல்.வும், அரசியல் விமர்சகருமான பழ.கருப்பையா. நையாண்டியாகவும், அதே சமயம் மனதில் உள்ளதை பட்டென உடைத்துப்பேசும் அவர், விஜய் பற்றியும் வெளிப்படையாக பேசிய அவர், ‘‘ விஜயிடம் எந்தக் கொள்கையும் இல்லை.

25

திமுக- அதிமுகவுக்கு எதிராக ஒவ்வொரு முறையும் மாற்றுக்கட்சியாக வந்த மூன்றாவது அணி ஒதுக்கப்பட்டன. மாற்றுக் கட்சிகள் வீழ்த்தப்பட்டன. இதை விஜயகாந்த் செய்தார். 9, 10 பேரை சேர்த்துக்கொண்டார். மதிமுக, திருமாவளவன் போன்ற கட்சிகளை சேர்த்துக் கொண்டார். ஆளுக்கு ஒரு மாலை போட்டுக்கொண்டு சுவர்களிலே சுவரொட்டிகளாக நின்றார்கள். இனி அவ்வளவுதான்... இனி, மாற்று ஆட்சி ஏற்படப்போகிறது. கூட்டணி ஆட்சி ஏற்பட போகிறது என்று 2016-ல் சொன்னார்கள்.

இவர்களின் மக்கள் நல கூட்டணி அப்போது 13 சதவிகித ஓட்டு வாங்கியது. உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் தோற்று விட்டார். ஆக 27 இடங்களை பெற்று எதிர்க்கட்சி தலைவராக இருக்க முடிந்தவர். உளுந்தூர்பேட்டையில் தானே தோற்றுவிடுவது என்ற முடிவு என்பது மூன்றாவது அணி முடிவு. இது ஓட்டைப் பிரிக்கின்ற வித்தையே தவிர, ஜெயலலிதாவுடன் சேர்ந்து எதிர்க்கட்சி தலைவர் ஆனவர், 27 இடத்தை 48 இடமாக்கி 98 இடமாக்கி அப்படியே ஆட்சிக்கு வருவதற்கு முயலாமல் போய் பிறகு விலகி நின்றார்.

35

ஆட்டத்தில் இரண்டு கட்சிகள் ஊண்டி நிற்கின்றன. அதில் ஒரு கட்சியை பலவீனப்படுத்தி மீண்டும் அந்த இடத்தை அடைய வேண்டும். அதில்லாமல் எடுத்த உடனேயே ஆள்வதற்கு என்ற மனநிலையில் யாரும் வரக்கூடாது. விஜயும், அதிமுகவும் கூட்டணி அமைத்தால்தான் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப முடியும். இல்லாவிட்டால் மிகவும் சிரமம். கடைசி நேரத்தில் அதிமுக- வா? திமுக- வா? என்ற நிலைமை வந்துவிடும். விஜய் மக்களின் சிந்தனையை விட்டு விலகி விடுவார்.

விஜயின் லைம்லைட் சினிமாவின் லைம்லைட். மாநாட்டு மேடையில் எம்.ஜி.ஆர் பற்றி பேசுகிறார். விஜயகாந்த் பற்றி பேசுகிறார். சிங்கம் என்று கனைக்கிறார். அதை தவிர இந்த கூட்டம் கலைந்து செல்லும்போது புதிய கருத்தை பெற்றதா? அண்ணா மூன்று நாள் மாநாட்டை நடத்துவார். தொண்டர்கள் கிளம்புகிறபோது ‘திராவிட நாடு’ என்று அவர்களது மனதிலே சிந்தனையை விதைத்து விடுவார். ஆனால், விஜயிடம் ஒரு கருத்தும் இல்லை.மாநாட்டை விட்டு வெளியே சென்றபோது தொண்டர்கள் மனதில் ஏதாவது ஒரு விஷயம் நிலைபெற்று இருக்கிறதா?

45

விஜய்க்கு சிறுபான்மையினருடைய வாக்கு வரும். அது ஓரளவுக்கு திமுகவை பாதிக்கும் என்றாலும் கூட, திமுகவிடம் பணம் இருக்கிறது, அதிகாரம் இருக்கிறது, கூட்டணிகள் இருக்கின்றன. இந்த நிலையில் வலிமையாக ராவண வதம் வேண்டும் என்றும், ஸ்டாலினுடையஆட்சியை வீழ்த்த வேண்டும் என்று இரண்டாவது சிந்தனையே இல்லை. முடியுமா? முடியாதா? என்கிற ஐயமே இல்லாமல் நூற்றுக்கு நூறு செய்ய வேண்டிய ஒரு கட்டத்தில் விஜய் முதல்வராக வேண்டும் என்று சொன்னால் எடப்பாடி எப்படி ஒத்துக் கொள்வார்?

விஜய் வரட்டும். அனுபவத்தை கற்றுக் கொள்ளட்டும். பிறகு எல்லாம் செய்யட்டும். எம்.ஜி.ஆர் ஒருவரால்தான் வந்ததும் வெல்ல முடிந்தது. என்டிஆர் தெலுங்கு மானத்தை முன்னிலைப்படுத்தி வந்த வேகத்தில் வென்றார். எம்.ஜி.ஆர் மீதுக்களுக்கு இருந்த நம்பிக்கையால் கொண்டு வந்து விட்டார்கள். ஆகவே, இந்த இரண்டு நடிகர்களையும் தவிர, வந்த நடிகர்கள் நூற்றுக்கணக்கான பெயர் காணாமல் போனவர்கள். அதற்கு உதாரணமாக சிவாஜி கணேசன் உட்பட நிறைய இருக்கிறார்கள். ஒரு அரசியல் தேவையை, அரசியல் நெருக்கடியை பிரதிபலிக்கின்ற வகையிலே பேசாமல் இருக்கிறார் விஜய். இப்போது ஆயிரம் மடங்கு நெருக்கடிகள் இருக்கின்றன. விஜய் கடுமையாக பேச வேண்டும். இங்கு என்னென்ன தப்புகள் நடக்கிறது, இந்த ஆட்சியில் என்ன மாற்றம் வர வேண்டும் என்பதையெல்லாம் விஜய் பேச வேண்டும்.

55

பாருங்கள் தவெகவில் புஸ்ஸி ஆனந்துதான் இரண்டாவது பெரிய தலைவராம். இரண்டாவது பெருந்தலைவர் அவர் என்றால் எப்படி இருக்கும் இந்த கட்சி? விஜய் தனி ஆளாக முதலமைச்சராக முடியாது. எம்ஜிஆரை போல் அவருக்கு நிகழாது. காமராஜர் இருக்கும்போது காமராஜரை பின்னுக்கு தள்ளினார்கள். பத்தாண்டு ஆட்சி செய்தவர். 10 ஆண்டுகள் சிறைக்கு சென்றவர். மிகச் சிறந்த தியாகி. இவரை திண்டுக்கல் தேர்தலில் தள்ளி வைத்து விட்டார்கள். திண்டுக்கல் தேர்தலில் காமராஜர் இரண்டாவது இடத்திற்கு வந்து விட்டார். வந்திருக்கக் கூடாது. காமராஜர் போன்ற தலைவர்கள் எல்லாம் அந்த நிலையை அடைந்திருக்க கூடாது. கருணாநிதி மோசமான ஆள். அந்த ஆளை சமாளிக்க காமராஜரைவிட, எம்.ஜி.ஆர் தான் சிறந்தவர் என நம்பி மக்கள் எம்ஜிஆரை ஜெயிக்க வைத்தார்கள்.

எம்ஜிஆர் 51% வாக்குகளை பெற்றார். அவரை எதிர்த்து நின்ற மூன்று கட்சிகளும் சேர்ந்து 49 சதவீத ஓட்டுகளை மட்டுமே வாங்கியது. விஜய் பேச்சில் முறுக்கு ஏற்ற வேண்டும். இளைஞர்கள் கிடைப்பதே மிகப்பெரிய அபூர்வம். இருந்தும் என்ன செய்ய முடியும்? கடைசியில் பாருங்கள் அதிமுக- திமுக என்ற நிலைமைதான் வரும். நயன்தாராவை வைத்து பீக்- அவுட் செய்து விடுவார்கள் திமுக -காரர்கள். திமுகவினர் மூன்று, நான்கு நடிகைகளை தயார் செய்து கொண்டு இருக்கிறார்கள். விஜய் முதல் நாள் சனிக்கிழமை ஒரு இடத்திற்கு சென்றால், அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை அந்த நடிகைகள் அங்கே செல்வார்கள். இவருக்கு கூடிய கூட்டம், அந்த நடிகைகளுக்கும் கூடும். விஜயின் கூட்டத்தை இன்னொரு கூட்டத்தால் பீக் -அவுட் செய்யப்படும். பழைய கதைக்குப் போய் விடுவார்கள்’’ என்கிறார் பழ.கருப்பையா.

Read more Photos on
click me!

Recommended Stories