மு.க.ஸ்டாலினை நேருக்கு நேர் சந்திக்கும் விஜய்..! தவெகவின் அதிரடி வியூகம்..! அதிரிபுதிரியாகும் அரசியல் களம்..!

Published : Aug 25, 2025, 05:27 PM IST

அதிமுக-பாஜக கூட்டணியை விமர்சித்துப்பேசி அங்கிருந்து வாக்குகளை பெறுவது எளிமையான விஷயமாக இருக்கலாம். ஆனால், திமுகவுடைய வாக்குகளை எப்படி உடைப்பது என்கிற எண்ணத்தில்தான் தற்போது விஜயின் கவனம் முழுமையாக இருக்கிறது.

PREV
16

கடந்த காலங்களில் பெரிய அளவில் திமுகவுக்கு எதிரான ஒரு மனநிலையை எதிர்கட்சியான அதிமுக உருவாக்கத்தவறி விட்டது. அதிமுகவின் இடத்தை பிடிக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டில்தான் விஜய் மதுரை மாநாட்டில் எம்.ஜி.ஆர் உருவாக்கிய கட்சி இப்போது எப்படிப்பட்டவர்களின் கைகளில் சிக்கி இருக்கிறது என்று பேசியிருக்கிறார் என்கிறார்கள்.

இது குறித்து பேசிய நடுநிலை அரசியல் ஆர்வலர்கள், ‘‘தவெகவுக்கான ஆதரவு கூடிக்கொண்டே போகிறது. விஜய் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளிடம் பேசும்போது ‘‘அதிமுகவைக் கூட பின்னாடி தள்ளக்கூடிய அளவுக்கு தவெகவுக்கு ஆதரவு பெருகி வருகிறது. அந்த அளவுக்கு விஜய் முக்கியத்துவம் பெற்று வருகிறார்’’ என்கிறார்கள். அது உண்மைதான். இதையே பல சர்வேக்களிலும் பிரதிபலிக்கிறது.

தமிழ்நாட்டில் இருக்கக்கூடியவர்கள் பலரும் எடுத்துள்ளார்கள். அதே போல இந்தியாவில் இருக்கக்கூடிய மற்ற ஏஜென்சிகளும் சர்வே எடுத்திருக்கிறார்கள். விஜய்க்கு வரக்கூடிய ஆதரவுகளை பார்த்து அவர்களே ஆச்சரியப்படுகிற அளவுக்கு அந்த சர்வே முடிவுகள் உள்ளன. ஏனென்றால் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு கட்சிக்கு இந்த அளவுக்கு ஆதரவு இருக்குமா? என வியக்கிறார்கள். அந்த அளவுக்கு மக்கள் தவெகவை கவனிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.

26

விஜய் இவ்வலவு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார் என்றால் அதற்கு காரணம் அவருக்கு இருக்கக்கூடிய அந்த மாஸ். நான் வந்து ரிட்டயர்மென்ட் ஸ்டேஜ்ல அரசியலுக்கு வரல. நான் மக்களுடைய வீடுகளுக்கு எல்லாம் போய் சேர்ந்ததுக்கு பிறகு, அவர்களுடைய மனங்களில் இடம் பிடித்ததற்கு பிறகுதான் நான் அரசியலுக்கு வந்திருக்கிறேன் என்கிறார். இரண்டு பெரிய ஜாம்பவான் கட்சிகளை நம்மளால வீழ்த்த முடியும் என்கிற நம்பிக்கை அவருக்கு எங்கிருந்து கிடைக்கிறது என்றால் அதற்கு மிக முக்கியமான காரணம், தமிழ்நாட்டில் இன்றைக்கு திமுகவை எதிர்ப்பதற்கு ஒரு வலுவான கட்சி இல்லை. அந்த இடத்தில்தான் விஜய்க்கான அந்த ஆதரவு என்பது கூடுகிறது.

இப்போது அந்த இடத்தைத்தான் விஜய் குறி வைத்திருக்கிறார், அதை மதுரை மாநாட்டில் ஓபனாகவே போட்டு உடைத்திருக்கிறார். இப்போது விஜய் நினைத்தது மாதிரியே திமுகவினரும் அவரை அட்டாக் செய்கிறார்கள். அதிமுகவினரும் அட்டாக் செய்கிறார்கள். பாஜகவினரும் தாக்கி பேசுகிறார்கள். மற்ற கட்சிகளும் விஜயை அட்டாக் செய்ய தவறவில்லை. இப்போது விஜயை சுற்றித்தான் விவாதங்கள் நடந்து வருகின்றன. அப்படி ஒரு நிலையை அவர் ஏற்படுத்தி இருக்கிறார். இதுதான் விஜய்க்கு நம்பிக்கை ஏற்படுத்திய ஒரு மிகப்பெரிய வெற்றியாகக் கூட பார்க்கலாம். நேரடியாக விஜய்க்கு இதுவரை பதில் சொல்லாத திமுக அமைச்சர்கள், தற்போது பதில் சொல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள்.

36

46

நேரடியாக விஜயை எதிற்காத அதிமுக தலைவர்கள் தற்போது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். அதிமுக பொதுச்செயலாளர் ஈ.பி.எஸில் ஆரம்பித்து அதிமுகவில் இருக்கக்கூடிய மற்ற பல நிர்வாகிகள் எல்லாம் விஜய்க்கு பதில் சொல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள். அதே சமயத்தில் அந்த மாநாட்டில் விஜய் தன்னுடைய தொண்டர்களுக்கு என்ன சொல்ல வேண்டும் என்பதை சொல்லிவிட்டார். இரண்டாவது திமுகவை கடுமையாக அட்டாக் செய்தார். திமுக மீதான அந்த அட்டாக்கை கூர்மைப்படுத்தி இருக்கிறார்.

அதனால்தான் அவர் ஸ்டாலின் அங்கிளாக இருந்தாலும் நான் விடமாட்டேன். தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நான் விடமாட்டேன். அது ஸ்டாலின் அங்கிளாக இருந்தாலும் விடமாட்டேன் என்கிற தொனியில் பேசி இருந்தார். அப்படி அவர் பேசும் தொனி முதலமைச்சர் ஸ்டாலினுடைய இமேஜை பாதிக்கும். இப்போது திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது ஸ்டாலின் மட்டுமே. அந்த இமேஜ மையப்படுத்தித்தான் இப்போது ஒட்டுமொத்த திமுக கூட்டணியுடைய எலக்சன் ஃபைட்டிங் மிஷினரி என்ற கட்டமைப்பை உருவாக்கி இருக்கிறார்கள்.

56

ஸ்டாலினுடைய இமேஜுக்கு எந்தவிதமான ஒரு பாதிப்பும் வந்து விடக்கூடாது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கீழே இருக்கிறவர்கள் யார் எந்த தப்பு செய்தாலும், அவர்களுக்கு எந்தப் பிரச்சனை வந்தாலும் அது எந்த விதத்திலும் மு.க.ஸ்டாலினை பாதிக்கக் கூடாது என்கிற அளவில் அவரை நிலைநிறுத்தி வருகிறார்கள். அதனால்தான் அவருக்கு அந்த அப்பா என்ற ஒரு ஸ்தானத்தை நிறுவ முயற்சிக்கிறார்கள்.ஃபாதர் ஃபிகர் என்கிற ஸ்தானத்தில் அவரை கொண்டு போய் நிறுத்தி இருக்கிறார்கள். இந்த பிம்பத்தைத்தான் விஜய் உடைக்கிறார்.

விஜய் ஏன் அந்த பிம்பத்தை உடைக்க வேண்டும் என்று கேட்கலாம். காரணம், பெண்களுடைய வாக்குகளும், ஆதரவும் தற்போது இரண்டு கட்சிகளுக்கு அதிகமாக இருக்கிறது. திமுக பெண்களுடைய வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக கடந்த காலங்களில் செய்திருக்கக்கூடிய பல்வேறு திட்டங்கள் மூலமாக அந்த வாக்கு வங்கியை அவர்கள் பக்கம் திருப்பி இருக்கிறார்கள். பெண்களுடைய வாக்குகள் எல்லாம் முதலில் பெரும்பான்மையாக அதிமுகவுக்கு செல்லும். ஆனால், ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அந்த வாக்குகள் எல்லாம் திமுக பக்கம் திரும்பி இருக்கிறது.

இப்போது திமுக பக்கம் திரும்பி இருப்பதற்கு மிக முக்கியமான காரணம் அரசாங்க ரீதியாக திமுக பெண்களை மையப்படுத்தி கொண்டு வந்திருக்கக்கூடிய திட்டங்கள். இப்போது இந்த இடத்தில்தான் ஒரு அப்பா ஸ்தானத்திலிருந்து அவர் ஸ்டாலின் மக்களுக்கு செய்கிறார் என்பதைப்போல காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார்கள். அந்த பிம்பத்தைத்தான் விஜய் உடைக்க திட்டமிடுகிறார். இதை செய்தால் மட்டும்தான் தவெகவால் திமுகவை எதிர்கொள்ள முடியும். இல்லை என்றால் திமுகவிடம் இருந்து கொஞ்சம் வாக்குகளை உடைத்து கொண்டு வருவது மிகவும் சிரமமான ஒரு விஷயம் என்பது விஜய்க்கு தெரிந்திருக்கிறது.

66

இந்தப் பக்கம் அதிமுக-பாஜக கூட்டணியை விமர்சித்துப்பேசி அங்கிருந்து வாக்குகளை பெறுவது எளிமையான விஷயமாக இருக்கலாம். ஆனால், திமுகவுடைய வாக்குகளை எப்படி உடைப்பது என்கிற எண்ணத்தில்தான் தற்போது விஜயின் கவனம் முழுமையாக இருக்கிறது. அதுமட்டுமல்ல. அடுத்து வரக்கூடிய நாட்களில் விஜயின் திட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரடியாக சந்திப்பது. எந்தெந்த பிரச்சனைகளில் உங்களுடைய அரசாங்கம் தவறு செய்திருக்கிறது? எந்தெந்த விஷயங்களை நீங்கள் செய்ய வேண்டும்? என்கிற கோரிக்கை மனுவோடு முதலமைச்சரை நேரடியாக சந்திக்க திட்டமிட்டு இருக்கிறார்.

அப்படி சந்தித்தற்கு பிறகு திமுக அரசாங்கத்தின் மீதான தாக்குதலை விஜய் மேலும் தீவிரப்படுத்துவார். இன்னும் கூர்மையாக அட்டாக் செய்வார்’’ என்கிறார் அவர்.

ஆனால் ஒரு விஷயம். விஜய் நன்றாகத்தான் பேசுகிறார். அட்டாக் செய்கிறார். திட்டம் போடுகிறார். ஆனால், மக்களை சந்திப்பாரா? மக்களை சந்திப்பதற்காக அவர் எப்போது களத்தில் இறங்குவார்? என்கிற விமர்சனமும் தொடர்ந்து அவர் மீது இருந்து வருகிறது.

வாட் ப்ரோ… இட் இஸ் ராங் ப்ரோ..!

Read more Photos on
click me!

Recommended Stories