கரூரில் நாள் குறித்த திமுக..! வெறித்தனமாய்க் காத்திருக்கும் செந்தில் பாலாஜி..! எல்லையில் எடப்பாடியாருக்கு நோ என்ட்ரி..?

Published : Aug 25, 2025, 02:46 PM IST

நாலாவது சுற்றுப்பயணத்தை ஆரம்பித்து விட்டார். கோயம்புத்தூர் சென்றார், நாமக்கல் சென்றார், ஈரோடு சென்றார், திண்டுக்கல், திருச்சி வரை சென்றுவிட்டார். ஆனால் கரூருக்கு போகவில்லை. காரணம், செந்தில் பாலாஜியின் பயம்.

PREV
16

2018-ல் திமுகவில் இணைந்த பிறகு, கரூர் மாவட்டத்திற்கு அப்பால், கொங்கு மண்டலத்தின் பிற மாவட்டங்களில் உள்ள கவுண்டர் சமூக பிரபலங்கள், முக்கிய நிர்வாகிகளுடன் தொடர்பு என கட்சியின் ஆதிக்கத்தை பலப்படுத்தி வருகிறார்.

அவரது அரசியல் நகர்வுகள், மற்ற கட்சிகளைச் சேர்ந்தவர்களை திமுகவுக்கு இழுத்தல், தேர்தல் பணிகளில் முழுமூச்சாக இயங்குவது என கொங்கு மண்டலத்தில் திமுகவில் செல்வாக்கை உயர்த்தி இருப்பதாக கூறப்படுகிறது. 2024-ல் கரூர் நாடாளும்மன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை அவர் சிறையில் இருந்தபோதும் தீவிரமாக பணியாற்றியதால் வெற்றி பெற வைத்தார்.

இந்நிலையில் செப்டம்பர் 17ம் தேதி முப்பெரும் விழாவை கரூரில் நடத்த உள்ளதாக அறிவித்து இருக்கிறது திமுக தலைமை.

சென்னை, மதுரை, கோவை போன்ற மாநகரங்களில் மட்டுமே திமுகவின் முப்பெரும் விழாக்கள் நடைபஎறுவது வழக்கம். முதன்முறையாக கரூரில் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குக் காரணம், செந்தில் பாலாஜி. ஏற்கனவே அவர் கொங்கு மண்டல பொறுப்பாளராக இருக்கிறார். நிச்சயமாக அவர் பிரமாண்டமான ஏற்பாடுகளை செய்து விடுவார் என்கிற அடிப்படையில் கரூருக்கு இந்த வாய்ப்பை கொடுத்திருப்பதாக கூறுகிறார்கள்.

26

கரூரில் நடக்கும் இந்த முப்பெரும் விழாவில் பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருதுகளும் கொடுக்கப்பட உள்ளதாக அறிவித்திருக்கிறது தி.மு.க தலைமை. இதற்காக செந்தில் பாலாஜி கரூரில் இருந்து கிளம்பி சென்னை வந்திருக்கிறார். அண்ணா அறிவாலயத்தில் தலைவர்களை சந்தித்து முப்பெரும் விழாவுக்கான இடத்தேர்வு உள்ளிட்ட முக்கிய விஷயங்களை கட்சி தலைவர்களுடன் ஆலோசித்து வருகிறார்.

இதுகுறித்து திமுகவினர் கூறுகையில், ‘‘மதுரையில் நடந்த விஜய் மாநாட்டை மிஞ்சும் வகையில் இந்த மாநாடு இருக்கும். அதற்காகத்தான் கரூரில் இந்த முப்பெரும் விழாவை திமுக முடிவு செய்திருக்கிறது. இந்த முப்பெரும் விழா கரூரில் நடப்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நிச்சயமாக 300, 400 ஏக்கர் இடம் தேவை. 

அதற்காக கரூர்- திருச்சி பைபாஸ் ரோடு அல்லது கரூர்- மதுரை பைபாஸ் ரோட்டில் இடம் முடிவு செய்யப்படும். விஜயின் மதுரை மாநாட்டில் இரண்டிலிருந்து மூன்று லட்சம் பேர் கலந்து கொண்டிருப்பார்கள். அதைவிட இரண்டு மடங்கு பலம் காட்ட வேண்டும் என்பதில் செந்தில் பாலாஜி தெளிவாக இருக்கிறார். ஏற்கனவே சிறையில் இருந்த கொடுமை, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தாக வேண்டிய கட்டாயம், அதை தொடர்ந்து நடந்த சம்பவங்களை மனதில் வைத்து, வெறி என்று சொல்வார்களே அதை இந்த முப்பெரும் விழாவில் செந்தில் பாலாஜி கண்டிப்பாக காட்டுவார்.

36

பிரமாண்டமான கூட்டம், ஏற்பாடு, சாப்பாடு என எல்லா வகையிலும் பிரம்மாட்டம் கூட்ட திட்டமிட்டு இருக்கிறார். அந்த எதிர்பார்ப்பு திமுகவினிடையே தொற்றிக் கொண்டுள்ளது. இந்த விழா கரூரில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. பிஜேபி தற்போது தென் தமிழகத்தை முன்னிலைப்படுத்துகிறது. மதுரையில் கவனம் செலுத்தினார்கள். சமீபத்தில் நெல்லையில் பூத் கமிட்டி மாநாடு நடத்தினார்கள். அதில் அமித்ஷா கலந்து கொண்டார். இந்த நிலையில் திமுக முப்பெரும் விழாவில் கரூரில் வைப்பதற்கான காரணம், கடந்த சட்டமன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தில் திமுக தொய்வாக இருந்தது. கொங்கு மண்டலம் முன்பு பாஜக, அதிமுகவுக்கு சாதகமாக இருந்தது. ஆகையால்தான் அதிமுகவும், பாஜகவும் கொங்கு மண்டலத்தில் இனி கவலை இல்லை. இனி நம் தென் மாவட்டங்களுக்கு போகலாம் என பாஜக அங்கு செல்ல ஆரம்பித்துள்ளது.

ஆனால் செந்தில் பாலாஜி வந்த பிறகு கொங்கு மண்டலத்தை திமுகவின் கோட்டையாக மாற்றி வருகிறார். இப்போது அதிமுகவில் தங்கமணி கடுமையான அதிருப்தியில் இருக்கிறார். எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன் போன்றவர்கள் எல்லாம் அதிமுக தலைமை மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இதெல்லாம் அதிமுகவுக்கு மாபெரும் அடி. செந்தில் பாலாஜி வந்ததிலிருந்து கொங்கு மண்டலத்தில் திமுக அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்த முறை கொங்கு மண்டலத்தில் பாஜக, அதிமுகவை அடித்து காலி செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தில்தான் செந்தில் பாலாஜியை கொங்கு மண்டலத்தின் பொறுப்பாளராக்கினார்கள்.

46

ஏற்கனவே கோயம்புத்தூருக்கு பொறுப்பு அமைச்சராக போட்டிருந்தார்கள். அது மிகப்பெரிய பலனை திமுகவுக்கு கொடுத்தது. உள்ளாட்சி தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்றது. 2026 சட்டமன்ற தேர்தலிலும் திமுகவை மாபெரும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் செந்தில் பாலாஜி களப்பணியாற்றி வருகிறார். கொங்கு மண்டலம் ஆரம்பிப்பது கரூரிலிருந்து தான். இந்த முப்பெரும் விழாவை கோயம்புத்தூரில் போட்டிருந்தாலும், நாமக்கல், திருப்பூரில் போட்டிருந்தாலும் செந்தில் பாலாஜிக்கு பொறுப்பு என்றுதான் இருந்திருக்கும். கரூர் அவரது சொந்த மாவட்டம்.

2026 சட்டமன்ற தேர்தலுக்கான திமுகவின் பிரச்சாரத்திற்கான அட்சரமாக இந்த முப்பெரும் விழா இருக்கும். பெரிய அளவில் திரும்பி பார்க்க வைக்கும். கூட்டணி கட்சிகள் இந்த முப்பெரும் விழாவில் கலந்து கொள்ள உள்ளன. ஆகவே பிரச்சாரத்திற்கான ஆரம்பமாக இருக்கும். கொங்கு மண்டலத்தை நம்பி இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி இந்த மண்டலத்தில் இருந்துதான் பிரச்சாரத்தை ஆரம்பித்தார். அவர் கொங்கு பகுதியில் இருந்து பிரச்சாரத்தை ஆரம்பித்தாலும் இதுவரை கரூருக்கு வரவில்லை.

56

நாலாவது சுற்றுப்பயணத்தை ஆரம்பித்து விட்டார். கோயம்புத்தூர் சென்றார், நாமக்கல் சென்றார், ஈரோடு சென்றார், திண்டுக்கல், திருச்சி வரை சென்றுவிட்டார். ஆனால் கரூருக்கு போகவில்லை. காரணம், செந்தில் பாலாஜியின் பயம். இனி செப்டம்பர் 17 வரை அவர் கரூருக்கு வரமாட்டார், வரவும் முடியாது. காரணம், முப்பெரும் விழா அறிவித்ததால் எங்கு பார்த்தாலும் திமுக ஆட்களும், திமுக கொடியும் நிரம்பி வழிந்திருக்கும். ஏற்பாடு பிரமாண்டமாக இருக்கும். இந்த நேரத்தில் அவர் வந்து கரூருக்கு வந்து எதுவும் செய்ய முடியாது என்பது அவருக்கே தெரியும். எம்.ஆர்.விஜய பாஸ்கரின் அரசியல் தற்கொலை நிலைமையில் இருக்கிறது. ஆகையால் செப்டம்பரில் எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சார சுற்றுப்பயணம் கரூரில் இருக்காது.

66

எடப்பாடி பழனிசாமி, கட்சியை மட்டும் காப்பாற்றினால் போதும். ஜெயிக்க வேண்டும் என்றெல்லாம் நினைக்கவில்லை. ஆகையால்தான் அதிமுகவில் உள்ள அதிருப்தியைக்கூட அவர் கண்டுகொள்ளாமல் இருக்கிறார். அவர் எதையும் சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை. எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் தோற்றுப் போய் விடுவோம் என்று தெரிகிறது. வெளியில் வந்து பேசுகிறாரே தவிர, 100% கொங்கு மண்டலம் நமது கையை விட்டுப் போகிறது என்பதை அவர் கண்கூடாக பார்க்க ஆரம்பித்து விட்டார். வேலுமணி கோயம்புத்தூரை விட்டு வெளியே வருவதில்லை. தங்கமணியும் அதே நிலையில்தான் இருக்கிறார். செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையத்தை தாண்டி வருவதில்லை.

அதிமுகவில் உள்ள சீனியர்கள் எல்லாம் அவரவர் தொகுதிகளை காப்பாற்றி கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். ஆகையால் இந்த முறை அதிமுகவுக்கு மிகப்பெரிய வீழ்ச்சி காத்திருக்கிறது. பாஜக, அதிமுக கூட்டணி கொங்கு மண்டலத்தில் பெரும் தோல்வியை தழுவும்’’ என்கிறார்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories