சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு மீண்டும் சிக்கல்.! மறு விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை

First Published | Aug 10, 2023, 9:53 AM IST

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுதலை செய்து வேலூர்  நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து சீராய்வு செய்ய உள்ளதையடுத்து இன்று வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. 
 

பொன்முடி மீது சொத்து குவிப்பு வழக்கு

திமுக ஆட்சியான 2006 முதல் 2011 ஆம் ஆண்டு காலத்தில் உயர் கல்வி மற்றும் கனிம வளத்துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி, அப்போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தொடர்ந்து நடைபெற்ற அதிமுக ஆட்சி காலத்தில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, கடந்த 2006-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.

பொன்முடி விடுதலை

விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த இந்த வழக்கு, வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு விசாரணை பல ஆண்டுகாலமாக நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம், குற்றச்சாட்டுக்களுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி,  அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை  கடந்த ஜூன் 28ம் தேதி விடுதலை செய்து  தீர்ப்பளித்தது.  இந்த தீர்ப்புக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறை மேல் முறையீடு செய்யும் என எதிர்பார்க்க்ப்பட்ட நிலையில், 

Tap to resize

மறு விசாரணை- நீதிபதி அதிரடி

மேல் முறையீடு செய்யப்படாத காரணத்தால்சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து மறு ஆய்வு மனுவை விசாரணைக்கு எடுத்துள்ளார். இந்த மறு ஆய்வு வழக்கு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது தொடர்பாக எந்த வித காரணமும் வெளியாகவில்லை. இன்று நடைபெறுகிற விசாரணையின் தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது.  

இதையும் படியுங்கள்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அதிர்ச்சி கொடுத்த அமலாக்கத்துறை.. பங்களா வீட்டை முடக்கி அதிரடி..!

Latest Videos

click me!