ராகுலின் ஃப்ளைங் கிஸ் அன்பின் அடையாளம்! உங்க தலைவர்கள் ப்ளூ ப்லிம் பார்த்த போது எங்க போனீங்க! காயத்ரி ரகுராம்!

First Published | Aug 10, 2023, 8:16 AM IST

சிக்னேச்சர் ஸ்டைல் ஃப்ளைங் கிஸ் என்பது அன்பின் அடையாளம் என ராகுல் காந்திக்கு ஆதரவாக நடிகை காயத்ரி ரகுராம் குரல் கொடுத்துள்ளார். 

மத்திய பாஜக அரசுக்கு எதிராக நாடாளுமன்ற மக்களவையில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் மீதான விவாதத்தின் போது ராகுல் காந்தி மணிப்பூர் விவகாரத்தில் பாஜக அரசை கடுமையான விமர்சித்து பேசினார். பின்னர் பேச்சை முடித்துக் கொண்ட போது  ஃப்ளைங் கிஸ் கொடுத்தார். 

அவரது இந்த நடவடிக்கைக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து பாஜக பெண் எம்.பி.க்கள் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் புகார் அளித்தனர். இந்நிலையில் ராகுல் காந்திக்கு ஆதரவாக நடிகை காயத்ரி ரகுராம் குரல் கொடுத்துள்ளார்.

Tap to resize

இதுதொடர்பாக நடிகை காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- பாராளுமன்றத்தில் பெண் எம்.பி.க்கள் முன்னிலையில் உணர்ச்சியால் முத்தமிடுவது பிரச்சனையாக இருக்கும் போது இருவரையும் கண்டிக்க வேண்டும். இருவரும் பாராளுமன்றத்திற்கு முத்தம் கொடுத்தனர். 

ராகுல் காந்தியின் சிக்னேச்சர் ஸ்டைல் ஃப்ளைங்கிஸ் ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் அவர் தனது உரையை முடித்ததும் மேடையில் எந்த கெட்ட எண்ணமும் இல்லாமல் சிக்னேச்சர் ஸ்டைல் ஃப்ளைங்கிஸ், பாரத் ஜோடோவில் சிக்னேச்சர் ஸ்டைல் ஃப்ளைங்கிஸ் பொதுமக்களுக்கு அன்பின் அடையாளமாக வழங்கினார்.

இதையும் படிங்க;- அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அதிர்ச்சி கொடுத்த அமலாக்கத்துறை.. பங்களா வீட்டை முடக்கி அதிரடி..!

ஆனால் பாஜக தலைவர்கள் சட்டசபையில் புளூபிலிம் பார்த்து பிடிபட்டுள்ளனர். பாஜக பெண் தலைவர்களிடம் இருந்து ஏன் குரல் கொடுக்கவில்லை? பல பொதுக்கூட்டங்களில் பல பாஜக தலைவர்கள் பகிரங்கமாக பெண்களிடம் தவறாக நடந்து கொள்கிறார்கள் அப்போது ஏன் குரல் கொடுக்கவில்லை? என காயத்ரி ரகுராம் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். 

Latest Videos

click me!